/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர்' நாளிதழின் 'பள்ளி வழிகாட்டி' நிகழ்ச்சி; வரும் 15,16 தேதிகளில் நடக்கிறது
/
'தினமலர்' நாளிதழின் 'பள்ளி வழிகாட்டி' நிகழ்ச்சி; வரும் 15,16 தேதிகளில் நடக்கிறது
'தினமலர்' நாளிதழின் 'பள்ளி வழிகாட்டி' நிகழ்ச்சி; வரும் 15,16 தேதிகளில் நடக்கிறது
'தினமலர்' நாளிதழின் 'பள்ளி வழிகாட்டி' நிகழ்ச்சி; வரும் 15,16 தேதிகளில் நடக்கிறது
ADDED : பிப் 12, 2025 11:51 PM
கோவை; 'தினமலர்' நாளிதழின் சிறந்த பள்ளியை தேர்ந்தெடுப்பதற்கான பள்ளி வழிகாட்டி, 2025 நிகழ்ச்சி வரும், 15, 16ம் தேதிகளில் நடக்கிறது.
ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்கும் ஆரம்பக் கல்வியை பொறுத்தே, அவர்களின் உயர்கல்வி அமையும். ஒவ்வொரு பெற்றோரின் எண்ணமும், தங்களது குழந்தை களுக்கு சிறந்த கல்வியை தர வேண்டும் என்பதாகவே உள்ளது. அந்த இலக்கிலேயே, அவர்களின் மொத்த வாழ்க்கை பயணமும் இருக்கிறது.
சிறந்த கல்வியை தரும் பள்ளியை தேர்வு செய்வதில், பெற்றோருக்கு பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றன.
கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் பள்ளியா, விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிக்கும் பள்ளியா, எந்தப்பள்ளியை தேர்ந்தெடுப்பது என்ற குழப்பம் தீர்வதில்லை.
மாணவர்களின் நலனில், எப்போதும் அக்கறை கொண்ட 'தினமலர்' நாளிதழ், இதற்கும் வழிகாட்டுகிறது. 'தினமலர்' நாளிதழ், எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனங்கள் சார்பில், 'பள்ளி வழிகாட்டி 2025' நிகழ்ச்சி வரும், 15, 16ம் தேதிகளில் நடத்தப்படுகிறது. சிறந்த பள்ளியை தேர்வு செய்வது குறித்த, பெற்றோரின் குழப்பங்களுக்கு இந்த நிகழ்ச்சி நிச்சயம் தீர்வு தரும்.
கோவை அவிநாசி ரோடு சுகுணா திருமண மண்டபத்தில், காலை 10:00 முதல் மாலை 6:30 மணி வரை நிகழ்ச்சி நடக்கிறது. கொங்கு மண்டலத்திலுள்ள மிகச்சிறந்த பள்ளிகள், அனைத்தின் சிறப்பையும், நீங்கள் ஒரே கூரையின் கீழ், கண்டுணர்ந்து தெளிவு பெறலாம்.
நிகழ்ச்சியில், 25க்கு மேற்பட்ட பள்ளிகளின் அரங்குகள் இடம்பெறுகின்றன. இவற்றில் பள்ளிகளின் சிறப்பு அம்சங்களை தெரிந்து கொள்ளலாம். நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம்.
நிகழ்ச்சியை, நேஷனல் மாடல் பள்ளி இணைந்து வழங்குகிறது. அத்வைத் அகாடமி, பிரிட்ஜ்உட்ஸ் சர்வதேச பள்ளி, மான்செஸ்டர் சர்வதேச பள்ளி நிர்வாகிகள், இணை ஸ்பான்சர்களாக உள்ளனர்.