தினமலர் எதிரொலி: இப்போது சரியான நேரம் காட்டுகிறது மணிக்கூண்டு
தினமலர் எதிரொலி: இப்போது சரியான நேரம் காட்டுகிறது மணிக்கூண்டு
PUBLISHED ON : செப் 12, 2026 05:32 PM
அ நிறம் | அளவு
கோவை: கோவையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக, டவுன்ஹால் மணிக்கூண்டு உள்ளது. 100 ஆண்டு பழமையான மணிக்கூண்டில் உள்ள கடிகாரம் லண்டனில் இருந்து கொண்டு வரப்பட்டது.
தனியார் அமைப்பின் உதவியுடன் மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்கிறது. மணிக்கூண்டின் கடிகாரம் வேலை செய்யாமல் நின்றது.
இதுகுறித்து கடந்த 10ம் தேதி நமது நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. தற்போது மணிக்கூண்டு கடிகாரம் சரி செய்யப்பட்டு மீண்டும் இயங்கத் துவங்கியுள்ளது.
