sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

நாணயவியல் ஆய்வுகளால் கொங்குநாட்டுக்கு சிறப்பான இடம்: "தினமலர்' ஆசிரியர் டாக்டர் ஆர். கிருஷ்ணமூர்த்தி பேச்சு

/

நாணயவியல் ஆய்வுகளால் கொங்குநாட்டுக்கு சிறப்பான இடம்: "தினமலர்' ஆசிரியர் டாக்டர் ஆர். கிருஷ்ணமூர்த்தி பேச்சு

நாணயவியல் ஆய்வுகளால் கொங்குநாட்டுக்கு சிறப்பான இடம்: "தினமலர்' ஆசிரியர் டாக்டர் ஆர். கிருஷ்ணமூர்த்தி பேச்சு

நாணயவியல் ஆய்வுகளால் கொங்குநாட்டுக்கு சிறப்பான இடம்: "தினமலர்' ஆசிரியர் டாக்டர் ஆர். கிருஷ்ணமூர்த்தி பேச்சு


ADDED : ஜன 06, 2013 10:08 AM

Google News

ADDED : ஜன 06, 2013 10:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி :''கொங்குநாட்டின் முக்கியத்தை உணர்த்த, அதிக அளவில் நூல்களை வெளியிட வேண்டும்,'' என, 'தினமலர்' ஆசிரியர் டாக்டர் ஆர்.

கிருஷ்ணமூர்த்தி பேசினார்.தென்னிந்திய நாணயவியல் கழகத்தின் சார்பில் பொள்ளாச்சி என்.ஜி.எம்.,கல்லூரியில் நடந்த 23 வது தேசிய நாணயவியல் கருத்தரங்கில் 'தினமலர்' ஆசிரியர் டாக்டர் ஆர்.கிருஷ்ணமூர்த்தியின் சிறப்பு சொற்பொழிவில், அவர் பேசியதாவது:தென் இந்திய நாணயவியல் கழகம், 23 ஆண்டுகள் பழமையானது. ஒவ்வொரு ஆண்டும், கழகம் சார்பில் கருத்தரங்குகள்; நான்கு தென்னிந்திய மாநிலங்களில் சுழற்சி முறையில் நடத்தப்படுகிறது. முந்தைய காலங்களில் நாணயவியல் குறித்த அறிமுகம் போதுமானதாக இல்லை. பாரம்பரியம் மிக்க பல்கலைகளும், இத்துறை மீது அக்கறை காட்டவில்லை.1984ம் ஆண்டில் இத்துறையில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. அதே ஆண்டில், தமிழ்பிராமி எழுத்தில் 'பெருவழுதி' என்று பொறிக்கப்பட்ட சதுர வடிவிலான பாண்டிய நாணயத்தை, மதுரையில் உள்ள நாணய விற்பனையாளரிடம் இருந்து எனக்கு கிடைத்தது. மன்னன் பெருவழுதி, கி.மு., இரண்டாம் நூற்றாண்டில் ஆட்சி செய்தவராக கருதப்படுகிறது. சங்க காலத்தில் பண்டமாற்றுமுறை மூலம் வாணிபம் நிகழ்ந்ததால், நாணயங்கள் பயன்படுத்தப்படவில்லை என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். ஆனால், நாணயங்கள் புழக்கத்தில் இருந்ததற்கு, பாண்டிய நாணயங்களே சான்று.தொன்மை வாய்ந்த பல இடங்களுக்கு சென்று, நாணயங்களை சேகரிக்க துவங்கினேன். அதிஷ்டவசமாக, சங்க கால சோழர்களின் நாணயங்கள், சென்னையில் கிடைத்தன. அவை செம்புக்காசுகள், அதில் புலி சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. இதில் மேற்கொண்ட ஆராய்ச்சியை தொடர்ந்து ' சங்ககால சோழர் நாணயங்கள்' என்ற புத்தகத்தை 1986 ல் வெளியிட்டேன்.





அதன்பின், திருக்கொய்லூர் என்ற இடத்தில் சில நாணயங்கள் கிடைத்தன. 1987ல் ' சங்ககால மலையமான் நாணயங்கள்' என்ற நூலை வெளியிட்டேன். மக்களிடம், நாணயங்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் வகையில் ' தமிழ்நாடு நாணயவியல் சங்கத்தை' நிறுவினேன்.





தலைசிறந்த ஆராய்ச்சியாளர்களின் கருத்துக்களின் வாயிலாக, ரோம நாணயங்கள் குறித்த பல்வேறு தகவல்கள் வெளியானது. 1987 வரை சங்க கால பாண்டியர், சோழர் மற்றும் மலையமான் நாணயங்கள் கிடைத்தபோதும், சேர நாணயங்கள் மட்டும் கிடைக்கவில்லை.





இந்த கால கட்டத்தில், தமிழ்நாடு நாணயவியல் கழகத்தை ஏற்படுத்தினேன். இந்த அமைப்பு மூலம் தமிழகத்தின் தொன்மையான நாணயங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. வடநாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பேராசிரியர்களை வரவழைத்து கருத்தரங்குகளை நடத்தினேன். இதன் காரணமாக கொங்கு மண்டலத்திலும், மதுரையிலும் ரோமானிய நாணயம் குறித்து ஆய்வு வலுப்பெற்றது. 1987ல் சங்க கால பாண்டியர், மலையமான் நாணயங்கள் கண்டுபிடித்தாலும் சங்க கால சேர நாணயங்கள் கிடைக்க பெற வில்லை. 1987ல் மதுரைக்கு சென்றபோது, ஒரு வணிகர் முன்பக்கம் யானைச் சின்னமும், பின் பக்கம் வில் அம்பு உள்ள நாணயத்தை காண்பித்தார். அதை பார்த்தவுடன் அந்த நாணயம் சங்க கால சேர நாணயம் என்று உறுதி செய்து மகிழ்ந்தேன். ஆனால் அந்த நாணயங்கள் கிடைத்த இடத்தை கூற மறுத்துவிட்டார். கரூர் அமராவதி ஆற்றுப்படுகையில் கிடைக்க கூடும் என்று மனதில் நினைத்து மறு தினமே கரூர் சென்றேன். அங்கு சிறிய பாத்திரக்கடையில் ஏராளமான சேறும், சகதியும் கலந்து குவித்து வைக்கப்பட்டிருந்தது. அந்த நாணயங்கள் அமராவதி ஆற்றுப்படுகையிலிருந்து கிடைத்தது. இவை உருக்குவதற்கு திருப்பூருக்கு அனுப்பியதாக கூறினார். தொன்மையான நாணயங்கள் அழிந்துவிட்டதாக மனதில் எண்ணம் ஓடிக்கொண்டிருந்தது. நாணயங்களின் அருமை குறித்து அவர்களிடம் தெரிவித்ததை அடுத்து நாணயங்கள் உருக்குவதை நிறுத்திக்கொண்டனர்.





1986ம் ஆண்டு கவுகாத்தியில் நடந்த அகில இந்திய நாணயவியல் மாநாட்டில் சங்க கால சேர நாணயங்கள் குறித்த கட்டுரையை படித்தேன். கரூரில் தொன்மையான கிரேக்க நாணயங்களையும், பிற்கால ரோமானிய நாணயங்களையும் கண்டெடுத்து கட்டுரை எழுதினேன். கரூரில் கிடைத்த தொன்மையான நாணயங்களை ஆய்வு செய்து சங்க கால சேரர்களின் தலைநகர் கரூர்தான் என்பது உறுதியானது. கேரளத்து வரலாற்று ஆசிரியர்கள் சங்ககால சேரர்களின் தலைநகரம் கேரளத்தில் ஒருபகுதியில் இருந்ததாக கூறிவந்தார்கள். அது தவறு என்று தற்போது நிரூபணம் ஆகிவிட்டது.





கரூரில் கிடைத்த தொன்மையான நாணயங்கள் வரலாற்றை பறைசாற்றுகிறது. கொங்கு நாட்டு பெருமை குறித்து கல்லூரி ஆசிரியர்கள் தனி கவனம் செலுத்தி நூல்கள் எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தென் இந்திய நாணயவியல் கழகம் ஆண்டுதோறும் கருத்தரங்குகளை நடத்துகிறது. கரூர் நாணயங்கள் குறித்து 23 கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளது.இவ்வாறு டாக்டர் ஆர். கிருஷ்ணமூர்த்தி பேசினார்.








      Dinamalar
      Follow us