/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மார்கழி மகத்துவத்தை பிரதிபலித்த 'தினமலர்' கோலப்போட்டி
/
மார்கழி மகத்துவத்தை பிரதிபலித்த 'தினமலர்' கோலப்போட்டி
மார்கழி மகத்துவத்தை பிரதிபலித்த 'தினமலர்' கோலப்போட்டி
மார்கழி மகத்துவத்தை பிரதிபலித்த 'தினமலர்' கோலப்போட்டி
ADDED : டிச 26, 2025 05:11 AM

தி னமலர் சார்பில், மார்கழி கோலப்போட்டி நேற்று வடவள்ளி 'வெஸ்ட் பிரணவம் அபார்ட்மென்ட்' மற்றும் செல்வபுரம் 'மார்ட்டின் டெயிசன் ரெசிடென்சி' ஆகிய இடங்களில் நடந்தது. ஏராளமான வாசகியர் பங்கேற்று ரங்கோலி, புள்ளிக்கோலம், அத்தப்பூ கோலம் மற்றும் படிக்கோலங்களை போட்டு அசத்தினர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் நடத்திய 'ஆபரேஷன் சிந்தூர்' களம், திருமணக்கோலம், மயில் கோலங்கள் மற்றும் சுவாமி ஐயப்பன், ஆண்டாள், கிருஷ்ணர் போன்ற தெய்வங்களின் உருவங்கள் கோலங்கள் வழியாக மிக அழகாகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மேலும், மார்கழி என்றாலே இசை என்பதை விவரிக்கும் வகையில் இசைக்கருவிகளுடன் கூடிய பூக்கோலங்களும் இடப்பட்டிருந்தன.
எந்த கோலத்தை தேர்வு செய்வது என்று நடுவர்களே திணறும் வகையில், ஒவ்வொரு கோலமும் அத்தனை நேர்த்தியாகவும் அழகாகவும் அமைந்திருந்தன. பங்கேற்ற வாசகியர் விஜயலட்சுமி, சுதாராணி, பவானி ஸ்ரீ, நந்தினி கூறுகையில், “கோலத்தின் வழியாக எங்களின் எண்ணங்களை வெளிப்படுத்த முடிகிறது. இத்தகைய போட்டிகள் சமூக நல்லிணக்கத்தை உருவாக்குகின்றன” என்றனர்.
வெஸ்ட் பிரணவம் அபார்ட்மென்ட் தலைவர் பாலசுந்தரம், “குழந்தைகளும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பாரம்பரிய கலைகளை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல இது ஒரு நல்ல வாய்ப்பு,” என்றார்.
செல்வபுரம் மார்ட்டின் டெயிசன் ரெசிடென்சி தலைவர் தீபா, “சங்ககாலம் முதலே கோலம் போடுவது ஒரு சிறந்த உடற்பயிற்சியாகவும் பார்க்கப்படுகிறது. இதனை ஊக்கப்படுத்தும் தினமலரின் முயற்சி பாராட்டுக்குரியது,” என்றார்.
கோலப்போட்டியை தினமலர் உடன் போத்தீஸ், தி கேம்போர்டு இன்டர்நேஷனல் ஸ்கூல், ஆனந்தாஸ் மற்றும் யாழி நிறுவனங்கள் இணைந்து வழங்குகின்றன. ஜனவரி 11ம் தேதி வரை பல்வேறு அபார்ட்மென்ட்களில் போட்டிகள் நடைபெறஉள்ளன.
பரிசு பெற்ற வாசகியர் வெஸ்ட் பிரணவம் அபார்ட்மென்டில் புள்ளிக்கோலம்: முதலிடம் - விஜயலட்சுமி, 2ம் இடம் - சுதாராணி, 3ம் இடம் - சஸ்தீகா; ரங்கோலி: முதலிடம் - நந்தினி சசிகுமார், 2ம் இடம் - ரஜினி பூபாலன், 3ம் இடம் - திவ் ய பிரபு; படி புள்ளி கோலம்: முதலிடம் - மங்கையர் திலகம், 2ம் இடம் - சவுந்தரம்மாள், 3ம் இடம் - பானுமதி.
செல்வபுரம் மார்ட்டின் டெயிசன் ரெசிடென்சியில், ரங்கோலி: முதலிடம் - லலிதா, 2ம் இடம் - லதா, 3ம் இடம் - நந்தினி. (ஆறுதல் பரிசு: சந்தா, மூக்கம்மாள், உமா சுரேஷ்); புள்ளிக்கோலம்: முதலிடம் - ஸ்ரீமதி, 2ம் இடம் - விஜயலட்சுமி, 3ம் இடம் - உமா மகேஸ்வரி. (ஆறுதல் பரிசு: மாலா); அத்தப்பூ கோலம்: முதலிடம் - ஆஷா, 2ம் இடம் - ஸ்ரீவித்யா, 3ம் இடம் - தீபா. (ஆறுதல் பரிசு: சரஸ்வதி) மற்றும் கலை ரங்கோலியில் முதலிடம் - பாவனா ஸ்ரீ, 2ம் இடம் - ஹிமானி, 3ம் இடம் - தருணா ஆகியோர் சிறப்பு பரிசு பெற்றனர்.

