தினமலர் செய்தி எதிரொலி பயன்பாட்டுக்கு வந்தது இணைப்புப்பாலம்
தினமலர் செய்தி எதிரொலி பயன்பாட்டுக்கு வந்தது இணைப்புப்பாலம்
UPDATED : நவ 19, 2026 07:04 PM
ADDED : நவ 19, 2026 07:04 PM

கோவை: ‘தினமலர்’ செய்தி எதிரொலியாக, அரசு மருத்துவமனைக்குள் கட்டப்பட்ட இணைப்புப்பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்பட்டது.
அரசு மருத்துவமனையில், புதிய பல்நோக்கு சிகிச்சை கட்டடத்திற்கும், டவர் 1 மற்றும் டவர் 2 ஆகிய கட்டடங்களுக்கும் எளிதில் செல்லும் வகையில், 1.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில், இணைப்புப்பாலம் கட்ட, 2025 ஜன. மாதம் பூமிபூஜை போடப்பட்டது. கடந்த ஜூன் மாதம் இப்பாலம் பொருத்திய பிறகும், சிறு வேலைகள் காரணமாக பணிகள் இழுத்தடிக்கப்பட்டன.
இதுகுறித்து நமது நாளிதழில் நேற்று, ‘இணைப்புப்பாலம் திறக்க நல்ல நேரம் கிடைக்கலையோ’ என்ற தலைப்பில் செய்தி வெளியானது. இதையடுத்து, அப்பாலம் மக்கள் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டது.
இதனால் ஸ்ட்ரெச்சர், வீல்சேரில் நோயாளிகளை மற்ற பிரிவுகளுக்கு அழைத்து செல்லும் சிரமம் முடிவுக்கு வந்துள்ளது.
