/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர்' நாளிதழின் 'வெல்லட்டும் வேளாண்மை' திருவிழா விஞ்ஞானிகளுடன் கலந்துரையாட வாய்ப்பு
/
'தினமலர்' நாளிதழின் 'வெல்லட்டும் வேளாண்மை' திருவிழா விஞ்ஞானிகளுடன் கலந்துரையாட வாய்ப்பு
'தினமலர்' நாளிதழின் 'வெல்லட்டும் வேளாண்மை' திருவிழா விஞ்ஞானிகளுடன் கலந்துரையாட வாய்ப்பு
'தினமலர்' நாளிதழின் 'வெல்லட்டும் வேளாண்மை' திருவிழா விஞ்ஞானிகளுடன் கலந்துரையாட வாய்ப்பு
ADDED : டிச 26, 2025 05:01 AM
கோவை, டிச. 26-
'தினமலர்' நாளிதழ் சார்பில் 'வெல்லட்டும் வேளாண்மை' என்ற தலைப்பிலான வேளாண் வணிகத் திருவிழா, கோவை ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி அரங்கில் நாளை நடக்கிறது .
விவசாயிகள் தினத்தை முன்னிட்டு விவசாயிகள், வேளாண் தொழில் முனைவோரை கவுரவித்து, கொண்டாடும் வகையில் காலை, 10:00 முதல் மதியம், 1:00 மணி வரை கருத்தரங்கு நடக்கிறது. மறுபுறம் மாலை, 4:00 மணி வரை கண்காட்சியும் இடம்பெறுகிறது. விழாவில் பங்கேற்க முன்பதிவு செய்தவர்கள் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள், விவசாயம் சார்ந்ததொழில்புரிவோர், வேளாண் தொழில்முனைவோராக விரும்புவோர் மட்டுமின்றி பொது மக்களும் பங்கேற்கலாம். வேளாண் வணிக திருவிழாவில் பங்கேற்பதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், முன்பதிவு செய்யாதவர்களும் நேரடியாக பங்கேற்கலாம்; அனுமதி இலவசம்.
நிகழ்ச்சியில், வேளாண் பல்கலை விஞ்ஞானிகளுடன் நேர்முக கலந்துரையாடல் நடக்கிறது. மேலும், நஞ்சில்லா உணவு உற்பத்தி, அதிக மகசூல் பெறும் தொழில்நுட்ப உத்திகள், உணவுப் பொருட்களை பேக்கிங் செய்யும் வழிமுறைகள், பிராண்டிங் செய்வது எப்படி? உள்ளிட்ட தலைப்புகளில் கருத்தரங்கும் நடக்கிறது.
மேலும், வெற்றியாளர்களுடன் கலந்துரையாடுவதுடன், முன்னோடி தொழில் முனைவோருடன் நேரடியாக சந்தித்து உரையாடும் வாய்ப்பும் கிடைக்கும். இத்துடன், மதிப்புக்கூட்டிய வேளாண் வணிக தயாரிப்புகள், நல்லுணவுப்படைப்புகள், அங்கக விளைபொருட்கள் உள்ளிட்டவை தொடர்பான கண்காட்சியும், விற்பனையும் இடம்பெறுகிறது. வேளாண் வணிகத்தொடர்பு ஏற்படுவதுடன், உணவு பொருட்களின் தர மேம்பாடு குறித்தும் அனைவரும் அறிந்துகொள்ளலாம்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் இணைய வேளாண்மை, பண்ணை உயிரியல் தயாரிப்புகள், பண்ணை சார் இயந்திர தயாரிப்புகள், உயிரி தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உள்ளிட்டவை குறித்த விளக்கங்களும், உபகரணங்களும் காட்சிப்படுத்தப்படுகின்றன.
கருத்தரங்கில், மாவட்ட தொழில் மைய திட்டங்கள், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக திட்டங்கள், எம்.எஸ்.எம்.இ., திட்டங்கள், நபார்டு திட்டங்கள், வேளாண் வணிகத்தில் வாய்ப்புகள் மற்றும் 'ஸ்டார்ட் அப்' ஊக்குவிப்புக்கான அரசின் திட்டங்கள், 'ஸ்டார்ட் அப்' வெற்றி கதைகள் உள்ளிட்ட தலைப்புகளில் பல்துறை வல்லுனர்கள் கருத்துகள் தெரிவிக்கின்றனர்.
'ஸ்பான்சர்'களாக இணைபவர்! நிகழ்ச்சியில், சுகுணா பம்ப்ஸ் அண்ட் மோட்டார்ஸ், புரோசன் சோலார் ஆகிய நிறுவனங்கள் 'பவர்டு பை ஸ்பான்சர்'களாக இணைந்துள்ளனர். வேளாண் பல்கலையில் செயல்படும் வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தின் தொழில்நுட்ப வணிக காப்பகமானது அறிவுசார் பங்குதாரராகவும், ஐயப்பா பிளாஸ்டிக் நிறுவனம், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரி ஆகியோர் கோ-ஸ்பான்சர்களாகவும் கரம் கோர்க்கின்றனர். முன்பதிவு செய்தவர்களுக்கு, சொட்டு நீர் பாசனத்துக்கான உபகரணங்கள் அடங்கிய 'கிட்' ஐயப்பா பிளாஸ்டிக் நிறுவனம் சார்பில்வழங்கப்படுகிறது.

