/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர் பட்டம்' மெகா வினாடி வினா போட்டி: அரையிறுதிக்கு தகுதி பெற்ற மாணவ, மாணவியர்
/
'தினமலர் பட்டம்' மெகா வினாடி வினா போட்டி: அரையிறுதிக்கு தகுதி பெற்ற மாணவ, மாணவியர்
'தினமலர் பட்டம்' மெகா வினாடி வினா போட்டி: அரையிறுதிக்கு தகுதி பெற்ற மாணவ, மாணவியர்
'தினமலர் பட்டம்' மெகா வினாடி வினா போட்டி: அரையிறுதிக்கு தகுதி பெற்ற மாணவ, மாணவியர்
ADDED : டிச 18, 2024 09:04 PM

பெ.நா.பாளையம்; 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ் சார்பில் நடந்த, 'பதில் சொல்; பரிசை வெல்' என்ற வினாடி- வினா போட்டியில், பள்ளி மாணவர்கள் அற்புதமாக பதில் அளித்து, தங்கள் திறமையை வெளிப்படுத்தினர்.
'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பு 'பட்டம்' இதழ் சார்பில், மாணவர்களிடம் கற்றல் தொடர்பான தேடலை விரிவுபடுத்தவும், தேர்வுக்கு உற்சாகப்படுத்தும் விதமாகவும், 2018ம் ஆண்டு முதல், வினாடி--வினா போட்டி நடத்தப்படுகிறது.
நடப்பு கல்வி ஆண்டுக்கான 'வினாடி- வினா விருது, 2024-- 25' போட்டி, 'தினமலர்' நாளிதழ் மாணவர் பதிப்பான 'பட்டம்' மற்றும் சென்னை இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி சார்பில், அக்., 8ம் தேதி தொடங்கியது. இவர்களுடன், எஸ்.எஸ்.வி.எம்., கல்வி நிறுவனமும் கரம் கோர்த்துள்ளது.
'கோ- ஸ்பான்சர்' ஆக, சத்யா ஏஜென்சி உள்ளது. முன்பதிவு செய்த, 150 க்கும் மேற்பட்ட பள்ளிகளில், போட்டி நடத்தப்பட்டு வருகிறது.
பள்ளி அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்களுக்கு, அரை இறுதி போட்டிகள் நடத்தப்படும். இதிலிருந்து எட்டு அணிகள் தேர்வு செய்யப்பட்டு, இறுதிப்போட்டி நடத்தப்படும்.
சுதந்திரா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளி
அத்திப்பாளையம் சுதந்திரா நர்சரி மற்றும் பிரைமரி பள்ளியில் நடந்த வினாடி -வினா போட்டியில், 50 பேர் தகுதி சுற்றுக்கான பொது அறிவு தேர்வை எழுதினர். இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர் எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு, வினாடி- வினா போட்டிகள் நடத்தப்பட்டன.
மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், 'பி' அணியைச் சேர்ந்த, 5ம் வகுப்பு மாணவர் கவின்குமார், அதே வகுப்பைச் சேர்ந்த மாணவர் தாரனீஷ் ஆகியோர் முதலிடம் பெற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி முதல்வர் கீதாமணி சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளர்கள் ஆசிரியர்கள் அர்ச்சனா, மணிமேகலை, உமா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சுதந்திரா மேல்நிலைப்பள்ளி
அத்திப்பாளையத்தில் உள்ள சுதந்திரா மேல்நிலைப்பள்ளியில் நடந்த, வினாடி- வினா போட்டியில், 130 பேர் தகுதி சுற்றுக்கான பொது அறிவு தேர்வு எழுதினர். இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு, வினாடி- வினா போட்டிகள் நடத்தப்பட்டன. மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில், 'டி' அணியை சேர்ந்த, 9ம் வகுப்பு மாணவி கோகிலா வாணி, அதே வகுப்பு மாணவி கனீஷ்கா ஆகியோர், முதலிடம் பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் சுந்தரேஸ்வரன் சான்றிதழ்களை வழங்கினார். ஒருங்கிணைப்பாளர் பொன்மலர் ஆசிரியர்கள் இலக்கியா, கலாவதி, சண்முகப்பிரியா கலந்து கொண்டனர்.
ஜோதிபுரம் பயனீர் மில்ஸ் மேல்நிலைப்பள்ளி
ஜோதிபுரம் பயனீர் மில்ஸ் மேல்நிலைப்பள்ளியில் நடந்த, வினாடி- வினா போட்டியில், 82 பேர் தகுதி சுற்றுக்கான பொது அறிவு தேர்வு எழுதினார்.
இதில், அதிக மதிப்பெண் பெற்ற, 16 பேர், எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு, வினாடி-வினா போட்டி நடந்தது.
மூன்று சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியில், 'ஏ' அணியை சேர்ந்த, 9ம் வகுப்பு மாணவியர் நாகலட்சுமி, தக் ஷதா ஆகியோர் முதலிடம் பெற்றனர்.
வெற்றி பெற்றவர்களுக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் பிரியா பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில், ஒருங்கிணைப்பாளர்கள் ராமலக்ஷ்மி, ராஜ்மோகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.