/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர் பிரீமியர் லீக்' துவக்கம்! 'சிக்சர்'களால் எதிரணியினர் துவம்சம்: களைகட்டியது ஆடுகளம்
/
'தினமலர் பிரீமியர் லீக்' துவக்கம்! 'சிக்சர்'களால் எதிரணியினர் துவம்சம்: களைகட்டியது ஆடுகளம்
'தினமலர் பிரீமியர் லீக்' துவக்கம்! 'சிக்சர்'களால் எதிரணியினர் துவம்சம்: களைகட்டியது ஆடுகளம்
'தினமலர் பிரீமியர் லீக்' துவக்கம்! 'சிக்சர்'களால் எதிரணியினர் துவம்சம்: களைகட்டியது ஆடுகளம்
ADDED : ஏப் 29, 2025 06:31 AM

தினமலர் சார்பில் சிறுவர்களுக்கான, 'தினமலர் பிரீமியர் லீக்' கிரிக்கெட் போட்டி நேற்று துவங்கியது. சீனியர்களுக்கு இணையாக, ஜூனியர் அணியினர் 'சிக்சர்'களாக விளாசி திணறடித்தனர்.
தினமலர் நாளிதழ் சார்பில் 'ஸ்போர்ட்ஸ் லேண்ட்', 'ஸ்காலர்ஸ் சொல்யூஷன்ஸ்', 'ஓ.கே., ஸ்வீட்ஸ்' பங்களிப்புடன், 11-17 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான, 'தினமலர் பிரீமியர் லீக்' கிரிக்கெட் போட்டி நேற்று துவங்கியது.
வரும், மே 2ம் தேதி வரை, டென்னிஸ் பந்து கொண்டு நடத்தப்படும் இப்போட்டியானது, அவிநாசி ரோடு சி.ஐ.டி., கல்லுாரி, சரவணம்பட்டி சங்கரா கல்லுாரி, சின்னவேடம்பட்டி டி.கே.எஸ்., பள்ளி மைதானங்களில் நடக்கிறது.
'நாக் அவுட்' முறையிலான போட்டியில், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், 32 அணிகள் களம் இறங்கியுள்ளன. சி.ஐ.டி., கல்லுாரியில் நேற்று நடந்த முதல் போட்டியில், பினிசிங் பால்கன்ஸ் அணியும், 11 கிளவுன்ஸ் அணியும் மோதின.
ஆரம்பமே அதிரடி!
முதலில் பேட்டிங் செய்த 11 கிளவுன்ஸ் அணி, 10 ஓவரில், 3 விக்கெட்டுக்கு, 56 ரன்கள் எடுத்தது. பினிசிங் பால்கன்ஸ் அணியோ, 5.1 ஓவரில், 9 விக்கெட் வித்தியாசத்தில், 57 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 33 ரன்கள் எடுத்த வீரர் தரணிஷ்க்கு, ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
தொடர்ந்து, அடேங்கப்பா-11 அணியும், தெலுங்குபாளையம், 11 ஸ்டார்ஸ் அணியும் மோதின. பேட்டிங் செய்த அடேங்கப்பா அணியினர், 10 ஓவரில், 5 விக்கெட்டுக்கு, 113 ரன்கள் எடுத்தனர். 11 ஸ்டார்ஸ் அணியோ, 10 ஓவரில், 8 விக்கெட்டுக்கு, 87 ரன்கள் மட்டுமே எடுத்தது. 34 ரன்களுடன், 4 விக்கெட் வீழ்த்திய அடேங்கப்பா அணி வீரர் தவிஷ்க்கு, ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
ஆர்.ஆர்.,- ஷார்க்ஸ் அணியும், கே.ஏ.டி., டர்ப் அணியும் மோதியதில், முதலில் பேட்டிங் செய்த கே.ஏ.டி., அணியினர், 197 ரன்கள் எடுத்தனர்.
ஆர்.ஆர்.,-ஷார்க்ஸ் அணியினர், 10 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 26 ரன்கள் மட்டுமேஎடுத்தனர். 45 ரன்கள் எடுத்த கே.ஏ.டி., வீரர் அகிலாண்டேஸ்வரனுக்கு, ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
ஆர்.ஆர்., ஸ்டிரைக்ஸ் அணியும், ஸ்பார்டன்ஸ் அணியும் மோதின. பேட்டிங் செய்த ஸ்பார்டன்ஸ் அணி, 10 ஓவரில், 100 ரன்கள் எடுத்தது. ஆர்.ஆர்., ஸ்டிரைக்ஸ் அணியோ, 82 ரன்கள் மட்டுமே எடுத்தது. 25 ரன்கள் எடுத்த ஸ்பார்டன்ஸ் வீரர் மஹராசன், ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார்.
சுருட்டிய வீரர்கள்!
சி.ஐ.டி., மைதானம் ஒன்றில், பேட்டிங் செய்த ஸ்லெட்ஜ் வாரியர் அணி, 10 ஓவரில், 108 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய ரெயிசிங் ஸ்டார்ஸ் அணி, 9.2 ஓவரில், 110 ரன்கள் எடுத்தது. 56 ரன்கள் எடுத்த வீரர் ஹரிஷ், ஆட்ட நாயகன் விருதை தட்டி சென்றார்.
அதேபோல், ஆல்பா-11 அணியும், வி.ஐ.பி., கிங்ஸ் அணியும் மோதின. பேட்டிங் செய்த வி.ஐ.பி., அணி, 10 ஓவரில், 133 ரன்கள் எடுத்தது. ஆல்பா அணியோ, 7 ஓவரில், 134 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 64 ரன்கள் அடித்த வீரர் நிஷாந்துக்கு, ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
நோ-11 அணியும், ஆர்.ஆர்., துர்யா அணியும் மோதின. பேட்டிங் செய்த ஆர்.ஆர்., துர்யா அணி, 10 ஓவரில், 37 ரன்கள் எடுத்தது. நோ-11 அணியினரோ, 2.3 ஓவரில், 38 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 15 ரன்கள் எடுத்ததுடன், 3 விக்கெட் வீழ்த்திய வீரர் ஹர்ஜித்துக்கு, ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
விக்கெட் வீழ்ச்சி!
சின்னவேடம்பட்டி டி.கே.எஸ்., பள்ளி மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்த ஸ்பார்க்-11 அணி, 10 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 37 ரன்கள் எடுத்தது. கோவை பிரதர்ஸ் அணி, 6.2 ஓவரில், 2 விக்கெட்டுக்கு, 41 ரன்கள் எடுத்தது. வீரர் கலையரசன், 3 விக்கெட்களுடன் ஆட்ட நாயகன் விருதை தட்டிச்சென்றார்.
டீம் டிராகன்ஸ் அணியும், ராயல் கிரிக்கெட் அணியும் மோதியதில், முதலில் பேட்டிங் செய்த டீம் டிராகன்ஸ் அணி, 9 ஓவரில், 59 ரன்கள் எடுத்தது. ராயல் அணியினர், 8.5 ஓவரில், 62 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வீரர் தைவிக், 5 விக்கெட் வீழ்த்தி, ஆட்ட நாயகன் விருதை வென்றார்.
அடுத்து, பிளாக் பேந்தர்ஸ் அணி, 10 ஓவரில், 58 ரன்கள் எடுத்தது. எதிர்த்து விளையாடிய தி லீக் லெஜண்ட்ஸ் அணி, 7 ஓவரில் விக்கெட் இழப்பின்றி, 62 ரன்கள் எடுத்தது. 45 ரன்கள் எடுத்த வீரர் ரக்ஷித், ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.
எஸ்.கே.சி., விக்டரி வைப்பர்ஸ் அணியும், கோயம்புத்துார் வாரியர்ஸ் அணியும் மோதின. பேட்டிங் செய்த எஸ்.கே.சி., அணி, 10 ஓவரில், 95 ரன்கள் எடுத்தது. கோயம்புத்துார் வாரியர்ஸ் அணியோ, 10 ஓவரில், 7 விக்கெட்டுக்கு, 35 ரன்கள் மட்டுமே எடுத்தது. எஸ்.கே.சி., வீரர் தீபக், 3 விக்கெட்களுடன் ஆட்ட நாயகன் விருதை தட்டினார்.
'சிக்சர்' மழையில் ரசிகர்கள்
சங்கரா கல்லுாரி மைதானத்தில், வூல்ப் பேக் அணியும், ஹெல்பயர் ஹிட்டர்ஸ் அணியும் மோதியது. பேட்டிங் செய்த ஹெல்பயர் அணியினர், 10 ஓவரில், 186 ரன்கள் எடுத்தனர். வூல்ப் பேக் அணியோ, 10 ஓவரில், 6 விக்கெட் இழப்புக்கு, 60 ரன்கள் மட்டுமே எடுத்தது. 9 சிக்சர்கள் உட்பட, 91 ரன்கள் விளாசிய ஹெல்பயர் வீரர் செல்வாவுக்கு, ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
கணபதி சூப்பர் கிங்ஸ் அணியும், கணபதி, 11 ஸ்டார்ஸ் அணியும் மோத, முதலில் பேட்டிங் செய்த, 11 ஸ்டார்ஸ் அணியினர், 99 ரன்கள் எடுத்தனர். சூப்பர் கிங்ஸ் அணியோ எட்டு ஓவர்களில், 101 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 23 ரன்கள் எடுத்த வீரர் குகனுக்கு, சங்கரா கல்லுாரி முதல்வர் ராதிகா, ஆட்ட நாயகன் விருது வழங்கினார்.
டீம் பீனிக்ஸ் அணியும், ஹோப்ஸ், 11 ஜூனியர் அணியும் மோதியது. பேட்டிங் செய்த பீனிக்ஸ் அணி, 10 ஓவரில், 66 ரன்கள் எடுத்தது. ஹோப்ஸ் 11 அணியோ, 4 ஓவரில், 67 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 48 ரன்கள் எடுத்த வீரர் முபாஸ் அகமதுவுக்கு, ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.