/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர் பிரீமியர் லீக்' மாபெரும் கிரிக்கெட் போட்டி; 32 அணிகள் பங்கேற்கின்றன
/
'தினமலர் பிரீமியர் லீக்' மாபெரும் கிரிக்கெட் போட்டி; 32 அணிகள் பங்கேற்கின்றன
'தினமலர் பிரீமியர் லீக்' மாபெரும் கிரிக்கெட் போட்டி; 32 அணிகள் பங்கேற்கின்றன
'தினமலர் பிரீமியர் லீக்' மாபெரும் கிரிக்கெட் போட்டி; 32 அணிகள் பங்கேற்கின்றன
ADDED : நவ 21, 2024 09:48 PM

கோவை; 'தினமலர்' நாளிதழ் சார்பில், 32 கல்லுாரிகளுக்கு இடையேயான மாபெரும் 'தினமலர் பிரீமியர் லீக்' கிரிக்கெட் போட்டி விளையாட்டு வீரர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நான்கு கல்லுாரி மைதானங்களில் இன்று துவங்குகிறது.
கோவை விழாவின், 17வது பதிப்பை முன்னிட்டு, 32 அணிகள் பங்கேற்கும் கல்லுாரிகளுக்கு இடையேயான 'தினமலர் பிரீமியர் லீக்' கிரிக்கெட் போட்டி இன்று துவங்குகிறது.
'தினமலர்' நாளிதழானது நடுநிலையான செய்திகளை மக்களுக்கு வழங்குவதுடன், ஆரோக்கியம் சார்ந்த விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் வருகிறது.
மேலும், விளையாட்டை ஊக்குவிக்கவும், வீரர்களிடம் மறைந்திருக்கும் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக விளையாட்டு போட்டிகளையும் நடத்திவருகிறது. அந்த வகையில் கடந்த செப்., மாதம் நம் நாளிதழ் சார்பில், 16 அணிகள் பங்கேற்ற 'அபார்ட்மென்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்-2024' போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
தொடர்ந்து, கோவை விழாவை வரவேற்கும் விதமாக, வரும், 23ம் தேதி மாலை பொது மக்கள் தங்களது வீட்டு வாசலில் அழகான கோலமிட்டு, அதன் நடுவே விளக்கு ஏற்றி, அதை அப்படியே படம் பிடித்து அனுப்பிவைக்கவும், கோவை மக்களுக்கு 'தினமலர்' நாளிதழ் அழைப்புவிடுத்துள்ளது.
கல்லுாரி மாணவர்களும் விழாவை கொண்டாடும் விதமாக, 20 ஓவர் 'தினமலர் பிரீமியர் லீக்' கிரிக்கெட் போட்டியானது 'ஸ்டிட்ச் பால்' கொண்டு நடத்தப்படுகிறது. 'தினமலர்' நாளிதழுடன் 'லைகா கோவை கிங்ஸ்', எஸ்.எஸ்.வி.எம்., நிறுவனங்கள், இந்துஸ்தான் நிறுவனங்கள், 'வால்ரஸ்' நிறுவனம், சுப்ரீம் மொபைல்ஸ் ஆகியன இணைந்து வழங்குகின்றன.
கல்லுாரி மாணவர்களிடையே பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், சி.ஐ.டி., கல்லுாரி, வட்டமலைபாளையம் ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி, சரவணம்பட்டி சங்கரா கல்லுாரி, மலுமிச்சம்பட்டி எஸ்.என்.எம்.வி., கல்லுாரி மைதானங்களில் இன்று போட்டிகள் துவங்குகின்றன. தொடர்ந்து, வரும், 25 முதல், 29ம் தேதி வரை போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
பரிசும்; ஊக்குவிப்பும்!
போட்டியில் முதல் பரிசை வெல்லும் அணிக்கு, ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் டிராபி, இரண்டாம் பரிசாக ரூ.25 ஆயிரம் மற்றும் டிராபி, மூன்றாம் பரிசாக ரூ.15 ஆயிரம் மற்றும் டிராபி, நான்காம் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் டிராபி வழங்கப்படவுள்ளது.
மேலும், போட்டியின் முடிவில் மூன்று சிறந்த பவுலர்கள் 'லைகா கோவை கிங்ஸ்' அணி மூலம் 'நெட் பவுலர்'கள் ஆக தேர்வு செய்யப்பட்டு ஊக்குவிக்கப்பட உள்ளனர்.
களம் இறங்கும் அணிகள்!
n ரத்தினம் கலை அறிவியல் கல்லுாரி
n ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி
n எஸ்.டி.சி., பொள்ளாச்சி
n ஜே.சி.டி., இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி
n அக்ஷயா இன்ஜி., கல்லுாரி
n ஸ்ரீ ஈஸ்வர் இன்ஜி., கல்லுாரி
n டாக்டர். என்.ஜி.பி., கலை அறிவியல் கல்லுாரி
n வி.எல்.பி., ஜானகியம்மாள் கலை அறிவியல் கல்லுாரி
n சி.எம்.எஸ்., அறிவியல் மற்றும் வணிக கல்லுாரி
n கற்பகம் பல்கலை
n நேரு இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி
n ஸ்ரீ ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லுாரி
n ஸ்ரீ சாய் ரங்கநாதன் இன்ஜி., கல்லுாரி
n பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி
n கொங்குநாடு கலை அறிவியல் கல்லுாரி
n எஸ்.என்.எம்.வி., கலை அறிவியல் கல்லுாரி
n ஸ்ரீ ராமகிருஷ்ணா வித்யாலயா மாருதி உடற்கல்வி கல்லுாரி
n என்.ஜி.எம்., கல்லுாரி
n யுனைட்டெட் தொழில்நுட்ப கல்லுாரி
n ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி
n கே.பி.ஆர்., கலை அறிவியல் கல்லுாரி
n ஸ்ரீ கிருஷ்ணா இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி
n ஸ்ரீ சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி
n ஈஷா இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி
n இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரி
n இந்துஸ்தான் தொழில்நுட்ப நிறுவனம்
n இந்துஸ்தான் இன்ஜி., மற்றும் தொழில்நுட்ப கல்லுாரி
n குமரகுரு தொழில்நுட்ப கல்லுாரி
n பி.பி.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி
n சங்கரா அறிவியல் மற்றும் வணிக கல்லுாரி
n ஸ்ரீ அபிராமி நிறுவனங்கள்
n ஸ்ரீ நாராயணகுரு கல்லுாரி