/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறந்த பள்ளியை தேர்வு செய்ய 'தினமலர் பள்ளி வழிகாட்டி'
/
சிறந்த பள்ளியை தேர்வு செய்ய 'தினமலர் பள்ளி வழிகாட்டி'
சிறந்த பள்ளியை தேர்வு செய்ய 'தினமலர் பள்ளி வழிகாட்டி'
சிறந்த பள்ளியை தேர்வு செய்ய 'தினமலர் பள்ளி வழிகாட்டி'
ADDED : ஜன 02, 2026 05:04 AM
கோவை, ஜன. 2-
'தினமலர்' நாளிதழின் 'பள்ளி வழிகாட்டி 2026' நிகழ்ச்சி, நாளை (ஜன. 3) மற்றும் 4 தேதிகளில் நடைபெற உள்ளது.
தங்கள் குழந்தைகளுக்கு சிறந்த கல்வியை வழங்க எந்த பள்ளியை தேர்வு செய்வது என்பதில் பலருக்கும் குழப்பங்கள் இருக்கும். குறிப்பாக, செயல்பாடு அடிப்படையிலான கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கும் பள்ளிகள் எவை, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப குழந்தைகளுக்கு கற்றுத்தரும் பள்ளிகள் மற்றும் விளையாட்டுக்கு முன்னுரிமை வழங்கும் பள்ளிகள் எவை, என்ற தேடலில் உள்ள பெற்றோர்களுக்கு, இந்த நிகழ்ச்சி எதிர்காலத்திற்கான வலுவான ஆரம்பப்புள்ளி.
கொங்கு மண்டலத்தின் மிகச்சிறந்த 25க்கும் மேற்பட்ட பள்ளிகள் ஒரே கூரையின் கீழ் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கின்றன. 'தினமலர்' நாளிதழுடன், எஸ்.எஸ்.வி.எம். கல்வி நிறுவனங்கள் இணைந்து இந்த வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்துகின்றன. கோவை அவிநாசி ரோடு சுகுணா திருமண மண்டபத்தில் காலை 10:00 முதல் மாலை 6:30 மணி வரை நிகழ்ச்சி நடக்கிறது.

