/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சி நிறைவடைந்தது
/
'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சி நிறைவடைந்தது
'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சி நிறைவடைந்தது
'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சி நிறைவடைந்தது
ADDED : ஆக 19, 2025 01:59 AM

கோவை; கோவை கொடிசியா தொழிற்காட்சி வளாகத்தில், நான்கு நாட்களாக நடந்த, 'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் என்கிற வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி, நேற்று நிறைவடைந்தது.
சத்யா நிறுவனத்துடன் இணைந்து நடத்திய இக்கண்காட்சியில், 300க்கு மேற்பட்ட அரங்குகள் இருந்தன. குடும்பம் குடும்பமாக பொதுமக்கள் கண்காட்சிக்கு வருகை தந்து பயனடைந்தனர். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கிச் சென்றனர்.
'பில்டு எக்ஸ்போ' மற்றும் ஆட்டோமொபைல் அரங்குகளும் அமைக்கப்பட்டு இருந்தன. படகு சவாரி, வாட்டர் ரோலிங், புல்லட், காளையை அடக்கும் விளையாட்டுகளில் ஈடுபட்ட குழந்தைகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
புட் கோர்ட்டில் சைவம், அசைவம் என இரு விதமான உணவு வகைகளை ருசித்து மகிழ்ந்தனர். 'புட்லுாஸ்' நடன குழுவினரின் கலைநிகழ்ச்சி கண்காட்சிக்கு வந்திருந்தோரை மகிழ்ச்சிப்படுத்தியது. ஒரே இடத்தில் பொழுதுபோக்கு அம்சங்களுடன், மன நிறைவாக பொதுமக்கள் 'ஷாப்பிங்' செய்தனர்.