/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தினமலர்' சார்பில் 'வெல்லட்டும் வேளாண்மை' வேளாண் வணிகத் திருவிழா இன்று நடக்கிறது
/
'தினமலர்' சார்பில் 'வெல்லட்டும் வேளாண்மை' வேளாண் வணிகத் திருவிழா இன்று நடக்கிறது
'தினமலர்' சார்பில் 'வெல்லட்டும் வேளாண்மை' வேளாண் வணிகத் திருவிழா இன்று நடக்கிறது
'தினமலர்' சார்பில் 'வெல்லட்டும் வேளாண்மை' வேளாண் வணிகத் திருவிழா இன்று நடக்கிறது
ADDED : டிச 27, 2025 07:54 AM
கோவை: 'தினமலர்' நாளிதழ் சார்பில், விவசாயிகள், வேளாண் தொழில்முனைவோரைக் கொண்டாடும் வகையில், வெல்லட்டும் வேளாண்மை - வேளாண் வணிகத் திருவிழா, கோவையில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி அரங்கில் இன்று நடக்கிறது.
காலை 10:00 மணிக்குத் துவங்கும் நிகழ்ச்சியில், பொதுமக்கள், விவசாயிகள், ஸ்டார்ட்அப் துவங்க விரும்பும் அனைவரும் பங்கேற்கலாம். நிகழ்வில், விவசாயம், வேளாண் தொழில்வாய்ப்புகள், ஸ்டார்ட்அப், உணவுகள் சார்ந்த கருத்தரங்குகள் நடக்கின்றன.
பூச்சிக்கொல்லி நஞ்சில்லா உணவு, உணவு சிப்பமிடல் தொழில்நுட்பம், மாவட்ட தொழில் மையம் வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்கள், வேளாண் சந்தைப்படுத்துதல் மற்றும் வேளாண் வணிக திட்டங்கள், எம்.எஸ்.எம்.இ., துறை வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்கள், நபார்டு வங்கி திட்டங்கள், அரசின் ஆதரவுடன் வேளாண் தொழில்முனைவு ஸ்டார்ட் அப்கள் ஆகிய தலைப்புகளில் தொழில்நுட்ப கருத்தரங்கு மற்றும் கலந்துரையாடல் நடக்கிறது.
வெற்றி பெற்ற வேளாண் தொழில்முனைவோர்கள் தாங்கள் சாதித்த கதைகளை, எதிர்கொண்ட சவால்களை, தீர்வு கண்ட விதங்களைப் பகிர்ந்து கொள்கின்றனர்.
ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பங்கேற்கும் கண்காட்சியில், மதிப்புக் கூட்டிய வேளாண் வணிகத் தயாரிப்புகள், நல்லுணவுப் படைப்புகள், அங்கக விளைபொருட்கள், சிறுதானிய உணவுப்பொருட்கள், வழிகாட்டும் வணிகக் காப்பகங்கள், வேளாண் வணிகத் தொடர்பு, உணவுப்பொருட்களின் தர மேம்பாடு உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்படும்.
உணவுப் பொருட்கள் விற்பனைக்கும் வைக்கப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு மற்றும் இணைய வேளாண்மை, பண்ணை உயிரியல் தயாரிப்புகள், பண்ணை சார் இயந்திர தயாரிப்புகள், உயிரி தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், உயர் தொழில்நுட்ப விவசாயம் ஆகியவையும் கண்காட்சியில் இடம்பெறுகின்றன.
கரம்கோர்ப்பவர்கள்: வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தின், தொழில்நுட்ப வணிக காப்பகம், ஐயப்பா பிளாஸ்டிக் நிறுவனம், ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லுாரி ஆகியோர், நிகழ்ச்சியை இணைந்து வழங்குகின்றனர்.
முன்பதிவு செய்தவர்களுக்கு சொட்டு நீர் பாசனத்துக்கான உபகரணங்கள் அடங்கிய 'கிட்' வழங்கப்படும். முன்பதிவு செய்யாதவர்களும் பங்கேற்கலாம்.

