/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி மாணவர் சேர்க்கை நாளை துவக்கம்
/
அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி மாணவர் சேர்க்கை நாளை துவக்கம்
அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி மாணவர் சேர்க்கை நாளை துவக்கம்
அரசு ஐ.டி.ஐ.,யில் நேரடி மாணவர் சேர்க்கை நாளை துவக்கம்
ADDED : ஜூன் 17, 2025 09:35 PM
பெ.நா.பாளையம்,; கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள அரசினர் ஐ.டி.ஐ.,யில் நேரடி மாணவர்கள் சேர்க்கை நாளை துவங்குகிறது.
கோவை அரசு ஐ.டி.ஐ.,யில் முதல் கட்ட கலந்தாய்வு சேர்க்கை நிறைவுற்ற நிலையில், மீதமுள்ள காலி இடங்கள், நேரடி சேர்க்கை வாயிலாக நிரப்பப்பட உள்ளது.
நேரடி சேர்க்கை நாளை வியாழக்கிழமை துவங்குகிறது. அரசு ஐ.டி.ஐ., நிலையத்தில் சேர கல்வி தகுதி, 10ம் வகுப்பு தேர்ச்சி பெறுதல் வேண்டும். மேலும், வயது வரம்பு ஆண்களுக்கு, 14 முதல், 40 வயது வரை என்றும், பெண்களுக்கு உச்சவரம்பு இல்லை என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இங்கு எலக்ட்ரீசியன், பிட்டர், டர்னர், மிஷனிஸ்ட், ஒயர்மேன் உள்ளிட்ட பல்வேறு தொழில் பிரிவுகளில் ஆண், பெண் இருபாலருக்கும் ஆறு மாதம், ஓராண்டு மற்றும் இரண்டு ஆண்டு பயிற்சிகள் அளிக்கப்படும்.
இது தவிர, டாடா குழுமத்தின் புதிய தொழில் பிரிவுகளிலும் சேர்க்கை நடைபெறுகிறது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். பயிற்சியாளர்களுக்கு வரைபட கருவிகள், பேருந்து பயண இலவச அட்டை, சீருடை, காலணிகள், 750 ரூபாய் மாதாந்திர உதவித்தொகை, தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டத்தில் தகுதியான பயிற்சியாளர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
பயிற்சி முடியும்போது கோவையில் உள்ள முன்னணி தொழில் நிறுவனங்களில் இலவச பயிற்சி வழங்கப்பட்டு, பயிற்சிக்கு பின் அதே நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று தரப்படும்.
மேலும், விபரங்களுக்கு, 88254 34331 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.