/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாற்றுத்திறனாளி கொலை;சகோதரியின் கணவர் கைது
/
மாற்றுத்திறனாளி கொலை;சகோதரியின் கணவர் கைது
ADDED : அக் 14, 2025 01:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
போத்தனூர்:மதுக்கரை, தண்டபாணி தோட்டத்தில் மாற்றுத்திறனாளி மணிவிளக்கு, 30 என்பவர் தங்கை அஞ்சு, 27 உடன் வசித்து வந்தார். அஞ்சுவின் கணவர் தஞ்சாவூரை சேர்ந்த அஜித்குமார், 28. கடந்த 6ம் தேதி அஜித்குமார் போதையில், மனைவி அஞ்சுவை தாக்கியுள்ளார்.
இதனை மணிவிளக்கு தடுக்க முயன்றபோது, அஜித்குமார் காய்கறி வெட்டும் கத்தியால் மணிவிளக்கை குத்தியுள்ளார். கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி, கடந்த 11ம் தேதி அவர் உயிரிழந்தார்.
மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தனிப்படை போலீசார் அஜித்குமாரை தேடினர். புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள, சொந்த ஊரில் பதுங்கியிருந்த அஜித்குமாரை, நேற்று கைது செய்தனர்.