/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
முதியோர் இல்லத்தை கட்டி முடிக்க மாற்றுத்திறனாளிகள் ஆலோசனை
/
முதியோர் இல்லத்தை கட்டி முடிக்க மாற்றுத்திறனாளிகள் ஆலோசனை
முதியோர் இல்லத்தை கட்டி முடிக்க மாற்றுத்திறனாளிகள் ஆலோசனை
முதியோர் இல்லத்தை கட்டி முடிக்க மாற்றுத்திறனாளிகள் ஆலோசனை
ADDED : நவ 18, 2024 09:44 PM
கோவை ; அரிசிபாளையத்தில் முதியோர் இல்லம் கட்டுவது தொடர்பாக மாற்றுத்திறனாளிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.
ஒத்தக்கால்மண்டபம் அருகே அரிசிபாளையத்தில் மாற்றுத்திறனாளிகள் முதியோர் இல்லம் கட்டப்பட்டு வருகிறது. இதற்கு நிதியுதவி உள்ளிட்ட உதவிகள் பெறுதல் குறித்த ஆலோசனை கூட்டம், வரதராஜபுரம், தேசிய பார்வையற்றோர் இணையம் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
அகில இந்திய பார்வையற்றோர் இணைய குழு உறுப்பினர் சதாசிவம் பேசுகையில், ''தற்போது முதல் பார்வை மாற்றுத்திறனாளிகள் முதியோர் இல்லம் கட்டிவருகிறோம்.
''இதற்கு நிதி திரட்டி பெரும்பாலான பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. நாம் இயன்ற அளவு நிதியுதவி, பொருள் உதவி பெற வேண்டும்,'' என்றார்.
தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர் மனோகரன் உட்பட பலர் பங்கேற்றனர். நிறைவில், 50 பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு ஊன்றுகோல் வழங்கப்பட்டது.