தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காய்கறிகள் வரத்து உயர்வு: விலை சரிவால் ஏமாற்றம்

காய்கறிகள் வரத்து உயர்வு: விலை சரிவால் ஏமாற்றம்

காய்கறிகள் வரத்து உயர்வு: விலை சரிவால் ஏமாற்றம்


UPDATED : ஆக 10, 2026 04:46 PM

ADDED : ஆக 10, 2026 04:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 10, 2026 04:46 PM ADDED : ஆக 10, 2026 04:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில் காய்கறிகள் வரத்து உயர்ந்துள்ள நிலையில், பெரும்பாலான காய்கறிகள் விலை குறைந்துள்ளது.

கிணத்துக்கடவு, தினசரி காய்கறி மார்க்கெட்டில் தக்காளி (15 கிலோ பெட்டி) - 160, தேங்காய் (ஒன்று) - 25, கத்திரிக்காய் கிலோ - 50, முருங்கைக்காய் --- 40, வெண்டைக்காய் - 55, முள்ளங்கி --- 25, பூசணிக்காய் --- 15, அரசாணிக்காய் --- 10, பாகற்காய் --- 40, புடலை --- 25, சுரைக்காய் --- 30, பீர்க்கங்காய் --- 45, வெள்ளரிக்காய் --- 20, அவரைக்காய் --- 50, பீட்ரூட் -- 38, மற்றும் பச்சை மிளகாய் --- 40 ரூபாய்க்கு விற்பனையானது.

கடந்த வாரத்தை காட்டிலும், தக்காளி (15 கிலோ) --- 120, முள்ளங்கி கிலோ - 3, அரசாணிக்காய் --- 2, பாகற்காய் --- 10, பீர்க்கங்காய் --- 5, பச்சை மிளகாய் --- 10 ரூபாய் விலை குறைந்துள்ளது. கத்தரிக்காய் --- 6, பீட்ரூட் --- 3, சுரைக்காய் மற்றும் வெள்ளரிக்காய் -- 5 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.

வியாபாரிகள் கூறுகையில், 'தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களிலிருந்து அதிகளவில் தக்காளி வரத்து இருந்ததால், விலை குறைந்துள்ளது. இதனால், விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். வரும் நாட்களில் மற்ற அனைத்து காய்கறிகளும் கூடுதல் வரத்து இருக்கும், என, எதிர்பார்க்கப்படுகிறது,' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us