ADDED : ஜூன் 26, 2026 10:57 PM

அ நிறம் | அளவு
வால்பாறை: வால்பாறை நகராட்சி அலுவலகம் முதல் காந்திசிலை வரையிலான ரோட்டில், மக்கள் நடந்து செல்வதற்கு வசதியாக நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது. நடைபாதை பகுதியை ஆக்கிரமித்து கடைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதனால், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணியர் நடைபாதையை பயன்படுத்த முடியாமல், ரோட்டில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக, சந்தைநாளான ஞாயிற்றுக்கிழமைகளில் மக்கள் அவதிப்படுகின்றனர். மக்கள் ரோட்டில் நடக்கும் போது, வாகன விபத்து ஏற்படுகிறது.
பொதுமக்கள் கூறுகையில், 'மக்கள் நடந்து செல்லும் நடைபாதையில் அமைக்கப்பட்டுள்ள கடைகளை, நகராட்சி அதிகாரிகள் அகற்ற வேண்டும். நடைபாதை கடைகளுக்கு குறிப்பிட்ட இடத்தை ஒதுக்க வேண்டும். இதற்கு நடைபாதை வியாபாரிகளுடன் பேச்சு நடத்தி தீர்வு காண வேண்டும்,' என்றனர்.
