/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'மக்கர்' ஆன அரசு பஸ் பயணியர் அதிருப்தி
/
'மக்கர்' ஆன அரசு பஸ் பயணியர் அதிருப்தி
ADDED : ஜன 09, 2024 12:15 AM

பொள்ளாச்சி;பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் குண்டலப்பட்டி செல்லும் அரசு பஸ், 'மக்கர்' ஆனதால், பயணியர் அவதிக்குள்ளாகினர்.
பொள்ளாச்சியில் இருந்து, குண்டலப்பட்டிக்கு செல்லும் பஸ் (வழித்தட எண் 14சி) தினமும் உடுமலை ரோட்டில் சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, தென் குமாரபாளையம், கஞ்சம்பட்டி வழியாக செல்கிறது.
இந்நிலையில், குண்டலப்பட்டிக்கு செல்லும் பஸ் நேற்று, உடுமலை ரோடு மரப்பேட்டை பாலம் அருகே, 'மக்கர்' ஆகி நடுரோட்டில் நின்றதால் பயணியர் அவதிப்பட்டனர். இதையடுத்து அவ்வழியாக சென்ற மாற்று பஸ்சில் பயணியர் அனுப்பப்பட்டனர்.
சமூக ஆர்வலர்கள் கூறுகையில், 'கிராமங்களுக்கு இயக்கப்படும் பஸ்கள் அடிக்கடி பழுதாவதால், பல்வேறு சிரமங்களை மக்கள் அனுபவிக்கின்றனர். கிராமங்களுக்கு வரும் பஸ்களை நம்பியே மக்கள் உள்ளனர். எனவே, அரசு கவனம் செலுத்தி இதுபோன்று பஸ்களை மாற்றி புதுபஸ்களை இயக்க வேண்டும்,' என்றனர்.