தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ சுற்றுலா வளர்ச்சி திட்டங்கள்  கிடப்பில் உள்ளதால் அதிருப்தி

சுற்றுலா வளர்ச்சி திட்டங்கள்  கிடப்பில் உள்ளதால் அதிருப்தி

சுற்றுலா வளர்ச்சி திட்டங்கள்  கிடப்பில் உள்ளதால் அதிருப்தி


ADDED : ஆக 23, 2026 04:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 23, 2026 04:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை: சுற்றுலா வளர்ச்சி திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டதால், வால்பாறை மக்கள் கவலையடைந்துள்ளனர்.

வால்பாறைக்கு, நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வந்து செல்கின்றனர். சுற்றுலா பயணியரை மகிழ்விக்க ஆண்டு தோறும் கோடைவிழாவும் நடத்தப்படுகிறது. ஆனால் வேறு பொழுதுபோக்கு அம்சம் இல்லாததால், எதிர்பார்ப்புடன் வரும் சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

இதனிடையே, வால்பாறை வரும் சுற்றுலா பயணியரை மகிழ்விக்கும் வகையில், நகராட்சி சார்பில், படகு இல்லமும், தாவரவியல் பூங்காவும் அமைக்கப்பட்டது. நாளடைவில் படகு இல்லம் மற்றும் பூங்காவில், பராமரிப்பு இல்லாததாலும், அடிப்படை வசதி இல்லாததாலும் சுற்றுலா பயணியர் கடும் அதிருப்தியடைந்தனர்.

சுற்றுலா மேம்பாட்டு அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் கூறுகையில், ‘வால்பாறைக்கு வருவோரை மகிழ்விக்கும் வகையில், நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட படகுஇல்லம் மற்றும் பூங்கா காட்சிப்பொருளாக மாறி வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணியர் ஏமாற்றத்துடன் திரும்பி செல்ல வேண்டிய நிலை உள்ளது.

சுற்றுலா தலங்களில் போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.  கிடப்பில் போடப்பட்டுள்ள சுற்றுலாவளர்ச்சி திட்டங்களை விரைந்து முடிக்க வேண்டும். சுற்றுலாத்துறை சார்பில் வால்பாறை நகரில் தகவல் மையம் அமைக்க வேண்டும்,’ என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us