/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வினியோகம்
/
குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வினியோகம்
ADDED : நவ 20, 2024 10:13 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகள் கண்டறியப்பட்டு, ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.
'ஊட்டச்சத்தை உறுதி செய்' திட்டம் வாயிலாக, ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளை, இயல்பு நிலைக்கு திரும்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த திட்டத்தின் கீழ், 6 மாதம் முதல் 6 வயது வரை உள்ள கடும் ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தைகளின் ஊட்டச்சத்தை மேம்படுத்தும் வகையில், இரு ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படுகிறது.
அதில், சிறப்பு ஆரோக்கிய உணவு கலவை, இரும்புச்சத்து மருந்து, விதை நீக்கப்பட்ட பேரீச்சம் பழம், குடற்புழு நீக்க மாத்திரை, ஆவின் நெய் மற்றும் பருத்தி துண்டு ஆகியவை இருக்கும்.
அவ்வகையில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் வாயிலாக பொள்ளாச்சி நகராட்சி பாலகோபாலபுரம் வீதி நடுநிலைப்பள்ளியில் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கும் நிகழ்ச்சியில், 10 தாய்மார்களுக்கு பெட்டகம் வழங்கப்பட்டது.
வடக்கு ஒன்றியத்தில், 78 குழந்தைகள்; தெற்கு ஒன்றியத்தில் 74 குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களாக கண்டறியப்பட்டனர். அதில், கடும் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு இரண்டு பெட்டகமும், மிதமான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு ஒரு பெட்டகமும் வழங்கப்பட்டது.
மேலும், குழந்தைகளின் தாய்மார்களுக்கு, தாய்பால் வழங்குவதின் முக்கியத்துவம், ஊட்டச்சத்து உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.