/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மாவட்ட அளவிலான போட்டி என்.ஜி.என்.ஜி. பள்ளி வெற்றி
/
மாவட்ட அளவிலான போட்டி என்.ஜி.என்.ஜி. பள்ளி வெற்றி
மாவட்ட அளவிலான போட்டி என்.ஜி.என்.ஜி. பள்ளி வெற்றி
மாவட்ட அளவிலான போட்டி என்.ஜி.என்.ஜி. பள்ளி வெற்றி
ADDED : நவ 21, 2025 06:14 AM

ஆனைமலை: கோவை வருவாய் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டியில் ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி. பள்ளி வெற்றி பெற்றது.
கோவை வருவாய் மாவட்ட அளவிலான வாலிபால் மற்றும் பூப்பந்து விளையாட்டு போட்டிகள், கோவை கே.பி.ஆர். கல்லுாரியில் நடந்தது. 17 வயதுக்கு உட்பட்டோருக்கான வாலிபால் போட்டியில், இரண்டாமிடமும், 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கான பால் பேட்மிட்டன் போட்டியில் இரண்டாமிடமும், 17 வயதுக்கு உட்பட்ட மாணவியருக்கான பால்பேட்மிட்டன் போட்டியில் மூன்றாமிடம் பெற்றனர்.
19 வயதுக்கு உட்பட்டோருக்கான வாலிபால் போட்டியில் முதல் பரிசு பெற்று திருவண்ணாமலையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி செயலர் ரங்கசாமி, தலைமையாசிரியர் கிட்டுசாமி, உடற்கல்வி இயக்குனர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர்.