/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு மாவட்ட எஸ்.பி., சொன்னார் 'வெரிகுட்'

ADDED : அக் 16, 2024 12:18 AM

கோவை : சிறப்பாக கோவை மாவட்ட போலீசாரை, மாவட்ட எஸ்.பி., கார்த்திகேயன் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.
கோவை மாவட்ட போலீசாருக்காக, மாதாந்திர குற்ற ஆய்வு கூட்டம், எஸ்.பி., அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதில் கூடுதல் எஸ்.பி., டி.எஸ்.பி.,க்கள், இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ., போலீஸ் ஸ்டேஷன் பொறுப்பு அதிகாரிகள், சிறப்பு பிரிவு போலீசார் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கடந்த மாதம் நடந்த கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை போன்ற குற்றச் செயல்களில் தொடர்புடைய, குற்றவாளிகளை கைது செய்ய திறம்பட பணியாற்றிய, 13 இன்ஸ்பெக்டர், 29 எஸ்.ஐ.,க்கள், ஆறு எஸ்.எஸ்.ஐ.,க்கள், ஏழு தலைமை காவலர்கள், ஒன்பது முதல் நிலைக் காவலர்கள்-, 36 காவலர்கள் என மொத்தம் 100 போலீசாருக்கு, எஸ்.பி., கார்த்திகேயன் சான்றிதழ் வழங்கி சிறப்பித்தார்.