ADDED : ஆக 25, 2026 04:31 PM
கோவை: மாவட்ட நிர்வாகத்தில் உள்ள அரசுத்துறைகள், செயல்படுத்தப்படும் திட்டங்கள், தொடர்பு எண் குறித்த தகவல்கள், பொதுமக்கள் அறிந்து கொள்ள, அதிகாரப்பூர்வ இணையதளம் உருவாக்கி தகவல்கள் பதிவேற்றப்படும்.
மாவட்ட இணையதளத்தில் (https://coimbatore.nic.in), கலெக்டர் அலுவலகத்தினுள் செயல்படும் துறை சார்ந்த தகவல்கள், நிகழ்வுகளின் புகைப்படங்கள் அவ்வப்போது பதிவேற்றப்படுகின்றன. ஆனால் பிற துறை சார்ந்த தகவல்கள் அப்டேட் செய்யப்படுவதில்லை.
குறிப்பாக, சுகாதாரத்துறை இணை இயக்குனர் பதவியில் ராஜசேகரன் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் 2024 டிச.,ல் பணியிட மாறுதல் பெற்றார். தற்போது இணை இயக்குனராக சுமதி உள்ளார்.
கால்நடை துறை இணை இயக்குனராக குறிப்பிட்டுள்ள பெருமாள்சாமி பணி ஓய்வு பெற்று, அவருக்கு பதிலாக புதிய இணை இயக்குனர் மகாலிங்கம் பொறுப்பேற்றுள்ளார்.
இதேபோல, மற்ற துறைகளின் அடிப்படை தகவல்கள், தொடர்பு எண்களம் அப்டேட் செய்யப்படாமல் உள்ளது. தகவல் தொழில்நுட்பத்தில் மாவட்ட நிர்வாகமே ‘அப்டேட்’ இன்றி இருப்பது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
