sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரயில்வே கோட்ட மேலாளரே... கோரிக்கைகளை கவனியுங்க!

/

ரயில்வே கோட்ட மேலாளரே... கோரிக்கைகளை கவனியுங்க!

ரயில்வே கோட்ட மேலாளரே... கோரிக்கைகளை கவனியுங்க!

ரயில்வே கோட்ட மேலாளரே... கோரிக்கைகளை கவனியுங்க!


ADDED : அக் 18, 2024 10:17 PM

Google News

ADDED : அக் 18, 2024 10:17 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: பொள்ளாச்சி வந்த, பாலக்காடு கோட்ட மேலாளர் அருண்குமார் சதுர்வேதியிடம், முன்னாள் ரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் ஜோதிமணி மனு கொடுத்தார்.

அதில், கூறியிருப்பதாவது:

 பாலக்காடு - எர்ணாகுளம் மெமு ரயிலை பொள்ளாச்சியில் இருந்து இயக்க வேண்டும்; போத்தனுார் - மேட்டுப்பாளையம் மெமு ரயிலை பொள்ளாச்சி வரை நீட்டிக்க வேண்டும்.

 அமிர்தா விரைவு ரயிலை, ராமேஸ்வரம் வரை நீட்டிக்க வேண்டும். ஏற்கனவே அறிவித்த வாரம் இருமுறை மங்களூர் - ராமேஸ்வரம் விரைவு ரயிலை உடனே இயக்க வேண்டும்.

 மயிலாடுதுறை - பாலக்காடு வரை இயக்குவதாக அறிவிக்கப்பட்ட ரயிலை, ஆனைமலை ரோடு ரயில்வே ஸ்டேஷனில் நிறுத்தி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 ஏற்கனவே அறிவித்து, சோதனை ஓட்டம் நடத்திய பெங்களூரு - பொள்ளாச்சி -- பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரயிலை உடனடியாக இயக்க வேண்டும்.

 துாத்துக்குடி, மேட்டுப்பாளையம் எக்ஸ்பிரஸ் ரயில் அனைத்து நாட்களிலும் இயக்க வேண்டும்.

* பொள்ளாச்சி ரயில்வே சந்திப்பில், கூடுதலாக இரண்டு ரேக்குகள் அமைக்க வேண்டும். ஆனைமலை ரயில்வே ஸ்டேஷனில், கூட்ஸ் யார்டு அமைக்க வேண்டும்.

இவை உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.






      Dinamalar
      Follow us