/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பி.எஸ்.ஜி., மாணவர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்
/
பி.எஸ்.ஜி., மாணவர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம்
ADDED : அக் 29, 2024 12:10 AM

கோவை : பீளமேட்டில், பி.எஸ்.ஜி., அன்ட் சன்ஸ் அறக்கட்டளை சார்பில், பி.எஸ்.ஜி., மாணவர் இல்லத்தில் தீபாவளி கொண்டாட்டம், கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
பி.எஸ்.ஜி., அண்ட் சன்ஸ் அறக்கட்டளை சார்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய குழந்தைகள் பி.எஸ்.ஜி., பள்ளி மற்றும் கல்லூரிகளில், இலவசமாக கல்வி வழங்கப்படுகிறது. இம்மாணவர்களுக்காக, பீளமேட்டில் மாணவர் இல்லம் செயல்பட்டு வருகிறது. 208 மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர். இம்மாணவர் இல்லத்தில், தீபாவளி கொண்டாட்டம் நேற்று மாலை நடந்தது.
பி.எஸ்.ஜி., அறக்கட்டளை நிர்வாகிகள், கல்வி நிறுவனங்களின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர் இல்லத்தில் உள்ள மாணவர்களுடன் இணைந்து, பட்டாசு வெடித்து, தீபாவளி கொண்டாடினர்.
பி.எஸ்.ஜி., அறநிலைய நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன், பி.எஸ்.ஜி., கேர் இயக்குனர் ருத்ரமூர்த்தி, பி.எஸ்.ஜி., மேலாண்மை கல்லூரி இயக்குனர் ஸ்ரீவித்யா ஆகியோர் மாணவர்களுக்கு, புத்தாடைகள், பட்டாசு, இனிப்பு வழங்கினர். முன்னதாக, மாணவர்களுக்கான, விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.