/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீபாவளி பண்டிகை நெருங்குகிறது... சமையல் எண்ணெய் விலை உயர்கிறது!
/
தீபாவளி பண்டிகை நெருங்குகிறது... சமையல் எண்ணெய் விலை உயர்கிறது!
தீபாவளி பண்டிகை நெருங்குகிறது... சமையல் எண்ணெய் விலை உயர்கிறது!
தீபாவளி பண்டிகை நெருங்குகிறது... சமையல் எண்ணெய் விலை உயர்கிறது!
ADDED : செப் 18, 2024 10:47 PM
கோவை: பண்டிகை காலம் நெருங்கி வரும் சூழலில், சமையல் எண்ணெய் விலை அதிகரித்துள்ளதால் இனிப்பு மற்றும் காரம் விலையும் அதிகரிக்கும் என்று, வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தேசிய அளவில் சமையல் எண்ணெய் வகைகளை, அதிக அளவு இருப்பு வைத்துள்ள எண்ணெய் நிறுவனங்கள், நேற்று திடீரென்று விலையை உயர்த்தின. சமையலுக்கு பயன்படுத்தும் அனைத்து வகை எண்ணெய் விலையும் அதிகரித்துள்ளது.
இது குறித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் இருதயராஜா கூறியதாவது:
பண்டிகை காலம் நெருங்கும் நேரத்தில் எண்ணெய்க்கான இறக்குமதி வரி, 20 முதல் 22 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.
அதனால் மொத்த வியாபாரிகள் இறக்குமதியாகும் பாமாயில், சூரியகாந்தி, சோயா ஆகிய எண்ணெய் வகைகளுக்கு லிட்டருக்கு,10 ரூபாய் வரை உயர்த்தியிருக்கிறோம். சில்லறையில் விற்பனையாகும் போது அது, 20 ரூபாயாக அதிகரிக்கும். மக்கள் நலன் கருதி விதிக்கப்பட்ட வரியை, பண்டிகை காலம் முடியும் வரை அரசு ஒத்தி வைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் அதிகம் பயன்படுத்தம் பாமாயில், லிட்டர் ஒன்றுக்கு 100 ரூபாய்க்கு விற்றது, இப்போது ரூ.110க்கு விற்கிறது.
அதே போல் சூரியகாந்தி எண்ணெய், ரூ.120க்கு விற்றது ரூ.130 ஆகவும், சோயா எண்ணெய் ரூ.130 க்கு விற்றது, ரூ.140 ஆகவும் உயர்ந்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் மூன்று எண்ணெய் ரகங்களின் விலையும் உயர்ந்துள்ளதால், நல்லெண்ணெய், கடலை, தேங்காய், நெல்உமி எண்ணெய், விளக்கெண்ணெய் ஆகியவற்றின் விலையும் கணிசமாக உயரும் என்கின்றனர் வியாபாரிகள்.