தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., பிரமுகர்கள் பள்ளி விழாவில் சங்கமம்

 தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., பிரமுகர்கள் பள்ளி விழாவில் சங்கமம்

 தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., பிரமுகர்கள் பள்ளி விழாவில் சங்கமம்


ADDED : ஜூன் 29, 2026 05:01 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 29, 2026 05:01 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தேவராயபுரம்: தேவராயபுரம் அரசு உயர்நிலை பள்ளியில் நடந்த பொன்விழாவில், தி.மு.க., அ.தி.மு.க., த.வெ.க., மக்கள் பிரதிநிதிகள் ஒரே மேடையில் சங்கமித்தனர்.

பள்ளியின் பொன்விழா நேற்று கொண்டாடப்பட்டது. பரமேஸ்வரன்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் இருந்து, பொதுமக்கள் 101 தட்டுகளில் பள்ளிக்கு தேவையான பொருட்களை, மேளதாளத்துடன் சீர்வரிசையாக எடுத்து வந்தனர். ஏராளமான முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

விழாவுக்கு தலைமையாசிரியர் தேன்மொழி தலைமை வகித்தார். கவிஞர் கவிதாசன் முன்னிலை வகித்து, முன்னாள் மற்றும் இந்நாள் ஆசிரியர்களை கவுரவித்தார்.

இவ்விழாவில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார், முன்னாள் அமைச்சர் வேலுமணி, எம்.பி., ஈஸ்வரசாமி சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

முன்னாள் அமைச்சர் வேலுமணி, பள்ளியின் பொன்விழா நூலை வெளியிட்டார். அமைச்சர் சம்பத்குமார், பொன்விழா தபால்தலையை வெளியிட்டார்.

விழா மேடையில் முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் அமைச்சர் சம்பத்குமார் கைகுலுக்கி பேசிக்கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us