/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோவையில் 11ல் கண்டன ஆர்ப்பாட்டம் :தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆலோசனை
/
கோவையில் 11ல் கண்டன ஆர்ப்பாட்டம் :தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆலோசனை
கோவையில் 11ல் கண்டன ஆர்ப்பாட்டம் :தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆலோசனை
கோவையில் 11ல் கண்டன ஆர்ப்பாட்டம் :தி.மு.க., கூட்டணி கட்சிகள் ஆலோசனை
ADDED : நவ 09, 2025 12:56 AM
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டசபை தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணி 4ம் தேதி முதல் நடந்து வருகிறது. அந்தந்த ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள், வீடு வீடாகச் சென்று கணக்கெடுப்பு படிவம் வழங்கி வருகின்றனர். பூர்த்தி செய்த படிவங்களை விரைவில் திரும்ப பெற உள்ளனர். இப்பணி டிச. 4 வரை நடைபெற உள்ளது.
இதற்கு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆட்சேபனையை பதிவு செய்யும் வகையில், 11ம் தேதி கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம், தி.மு.க., அலுவலகத்தில் நேற்று நடந்தது.
கூட்டத்துக்கு தலைமை வகித்த மாநகர் மாவட்ட பொறுப்பாளர் செந்தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறுகையில், ''வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் பல்வேறு குளறுபடிகள் நடக்கின்றன. பீஹாரில் நடந்ததை போல் தமிழகத்திலும் நடக்காமல் இருக்க ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. பட்டியல் திருத்தப் பணிக்கு அரசு அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளதால், வழக்கமான பணிகள் முடங்கியுள்ளன. அவசரகதியில் நடத்தினால் தவறு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. பட்டியல் திருத்தப் பணியை குறுகிய காலத்துக்குள் செய்யக் கூடாது,'' என்றார்.
காங். - இ.கம்யூ. - மா.கம்யூ. - ம.தி.மு.க. - விடுதலை சிறுத்தைகள், மக்கள் நீதி மய்யம், எஸ்.டி.பி.ஐ. - மனிதநேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

