/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தி.மு.க., சார்பில் சைக்கிள் பேரணி
/
தி.மு.க., சார்பில் சைக்கிள் பேரணி
ADDED : ஜன 12, 2026 05:34 AM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி தெற்கு நகர தி.மு.க. சார்பில், திராவிட பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
தி.மு.க. கோவை தெற்கு மாவட்டத்துக்கு உட்பட்ட அனைத்து ஒன்றிய, நகர பகுதிகளிலும் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அதில், பொள்ளாச்சி தெற்கு நகர கழக பொறுப்பாளர் அமுதபாரதி ஏற்பாட்டில், சைக்கிள் பேரணி நடந்தது. 200 சைக்கிள் வீரர்கள் பங்கேற்றனர்.பேரணியை நகராட்சித்தலைவர் சியாமளா, வக்கீல் அதிபதி துவக்கி வைத்தனர்.
தெற்கு மாவட்ட செயலாளர் முருகேசன், எட்டு கிலோ மீட்டர் துாரம் சைக்கிள் ஓட்டி, வீரர்களுடன் பேரணியாக சென்றார். தொடர்ந்து, சைக்கிள் வீரர்களுக்கு சான்றிதழ்கள், பதக்கங்களும் வழங்கினார்.
இதில், வடக்கு நகர நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

