ADDED : டிச 16, 2024 12:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை; கோவை மாவட்ட தி.மு.க., மாநகர் மாவட்ட செயற்குழு கூட்டம், வடகோவையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில், நேற்று நடந்தது.
கடந்த, 10ம் தேதி உயிரிழந்த தி.மு.க., முன்னாள் எம்.பி., மோகன், நேற்று முன்தினம் உயிரிழந்த காங்., மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோருக்கு, இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்துக்கு, மாநகர் மாவட்ட தி.மு.க., செயலாளர் கார்த்திக் தலைமை வகித்தார். கட்சியின் சொத்து பாதுகாப்பு குழு துணைத் தலைவர் பழனிச்சாமி, மாநகர் மாவட்ட துணைச் செயலாளர்கள் கோட்டை அப்பாஸ், இளங்கோ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

