/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'வலுவான கூட்டணி மாயை உருவாக்கி வருகிறது தி.மு.க.,'
/
'வலுவான கூட்டணி மாயை உருவாக்கி வருகிறது தி.மு.க.,'
'வலுவான கூட்டணி மாயை உருவாக்கி வருகிறது தி.மு.க.,'
'வலுவான கூட்டணி மாயை உருவாக்கி வருகிறது தி.மு.க.,'
ADDED : ஆக 13, 2025 01:25 AM
கோவை; ''வலுவான கூட்டணி போன்ற மாயை உருவாக்கி வருகிறது தி.மு.க.,'' என பா.ஜ., மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி:
எங்கள் கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. தினகரனுடன் பேசிக் கொண்டு உள்ளேன். தேர்தலுக்கு இன்னும் நாட்கள் உள்ளன. ஒரே மேடையில் தலைவர்கள் விரைவில் பேசுவர். முறையான ஏற்பாடுகள் முடிந்த பிறகு, கூட்டணி கட்சிகளின் பெயர்கள் மேடைகளில் அறிவிக்கப்படும்.
தி.மு.க., வலுவான கூட்டணி போன்ற, மாயையை உருவாக்கி வருகிறது. அக்கட்சியினர் தோல்வி பயத்திலேயே இருந்து வருகின்றனர். சொத்து வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு, தினசரி கொலைகள், கஞ்சா கடத்தல் காரணமாக, இந்த ஆட்சிக்கு மக்களிடம் கடும் எதிர்ப்பு உள்ளது. தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெல்லும்.
இவ்வாறு, நயினார் நாகேந்திரன் கூறினார்.