/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தி.மு.க.வினர் வாகனங்களால் நெரிசல்; விபத்து ஏற்பட்டதால் வாக்குவாதம்
/
தி.மு.க.வினர் வாகனங்களால் நெரிசல்; விபத்து ஏற்பட்டதால் வாக்குவாதம்
தி.மு.க.வினர் வாகனங்களால் நெரிசல்; விபத்து ஏற்பட்டதால் வாக்குவாதம்
தி.மு.க.வினர் வாகனங்களால் நெரிசல்; விபத்து ஏற்பட்டதால் வாக்குவாதம்
ADDED : செப் 17, 2025 09:24 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில் இருந்து கரூருக்கு தி.மு.க.வினர் சென்ற வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தமிழகத்தில், அரசியல் கட்சி தலைவர்கள் வருகை, பொதுக்கூட்டம், முதல்வர், அமைச்சர்கள் வருகையின் போது, வாகனங்களில் ஆட்களை அழைத்துச் செல்வது வாடிக்கையாகிவிட்டது.ஆளுங்கட்சி, எதிர்கட்சி என அனைத்து கட்சிகளும் இந்த, 'பார்முலா'வை பின்பற்றுகின்றனர். ஆட்களை அழைத்துச் செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதால் விபத்துகள் ஏற்படுகிறது.
நேற்று, தி.மு.க. நிகழ்ச்சிக்காக, பொள்ளாச்சியில் இருந்து கரூருக்கு கட்சியினரை அழைத்துச் சென்ற வாகனம் வேகமாக இயக்கப்பட்டதால், காந்தி சிலை அருகே இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதனால், வாகன ஓட்டுநருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதை தவிர்க்க ஆட்களை அழைத்துச் செல்வோர், மிதவேகமாக, பாதுகாப்பாக செல்ல வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
* வால்பாறையிலிருந்து தி.மு.க. நகர செயலாளர் சுதாகர் தலைமையில், 30க்கும் மேற்பட்ட வாகனங்கள் நேற்று காலை, 8:45 மணிக்கு கரூருக்கு புறப்பட்டன. வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில் இருந்து வந்த வாகனங்கள், காந்திசிலை வளாகம் வந்ததும், போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்தன.
குறிப்பாக, பள்ளி நேரம் என்பதால் பஸ் மற்றும் ஆட்டோவில் வந்த மாணவர்கள், குறிப்பிட்ட நேரத்துக்கு பள்ளி செல்ல முடியாமல் தவித்தனர். தி.மு.க.,வினர் சென்ற வாகனங்கள் அணிவகுத்து சென்றதால், வால்பாறை நகரில் மாணவர்கள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.