sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 27, 2026 ,பங்குனி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

/

 மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

 மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

 மத்திய அரசை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்

2


ADDED : மார் 16, 2026 07:16 AM

Google News

ADDED : மார் 16, 2026 07:16 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

- -நிருபர் குழு -:

மத்திய அரசைக்கண்டித்து, பொள்ளாச்சியின் பல்வேறு பகுதிகளில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

பொள்ளாச்சி காந்தி சிலை அருகே, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மற்றும் வடக்கு நகர தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதில், வடக்கு நகர பொறுப்பாளர் நவநீத கிருஷ்ணன் தலைமை வகித்தார். நகராட்சி தலைவர் சியாமளா மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் என, பலர் பங்கேற்றனர்.

இதில், காஸ் தட்டுப்பாடு மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி அரசை கண்டித்து கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டம் நடந்தது.

* தெற்கு நகரம் தி.மு.க. சார்பில் பொள்ளாச்சி தபால் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், தெற்கு நகர பொறுப்பாளர் அமுத பாரதி தலைமை வகித்தார். சட்ட திட்ட குழு உறுப்பினர் செல்வராஜ், நகராட்சி தலைவர், துணை தலைவர் கவுதமன், கவுன்சிலர் செந்தில் குமார் மற்றும் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

வால்பாறை வால்பாறையில் தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில், பழைய பஸ் ஸ்டாண்டில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க., நகர செயலாளர் சுதாகர் தலைமையில் காஸ் தட்டுப்பாட்டை குறிக்கும் வகையில் சிலிண்டருக்கு மாலை அணிவித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.,கூட்டணி கட்சிகளை சேர்ந்த காங்., கம்யூ., ம.தி.மு.க.,வி.சி., உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us