/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'தி.மு.க.,வை 2026ல் ஒழிக்க வேண்டும்': பா.ஜ., சிறுபான்மையினர் அணி தேசிய செயலர் காட்டம்
/
'தி.மு.க.,வை 2026ல் ஒழிக்க வேண்டும்': பா.ஜ., சிறுபான்மையினர் அணி தேசிய செயலர் காட்டம்
'தி.மு.க.,வை 2026ல் ஒழிக்க வேண்டும்': பா.ஜ., சிறுபான்மையினர் அணி தேசிய செயலர் காட்டம்
'தி.மு.க.,வை 2026ல் ஒழிக்க வேண்டும்': பா.ஜ., சிறுபான்மையினர் அணி தேசிய செயலர் காட்டம்
ADDED : மே 20, 2025 06:48 AM

தொண்டாமுத்தூர் : '' தி.மு.க.,வை, 2026ல் ஒழித்து கட்டுவோம்,'' என, பா.ஜ., சிறுபான்மையினர் அணி தேசிய செயலர் வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.
பேரூர் தவத்திரு சாந்தலிங்க அடிகளார் ஆதின மடத்தில், பேரூர் ஆதினம் மருதாசல அடிகளாரை, பா.ஜ., சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலர் வேலூர் இப்ராஹிம், மரியாதை நிமித்தமாக நேற்று மாலை சந்தித்தார். மத நல்லிணக்கம் தொடர்பாக கலந்துரையாடினர்.
அதன்பின், வேலூர் இப்ராஹிம், நமது நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
தி.மு.க., என்ற விஷ விதை, ஆலவிருட்சமாக வளர்ந்து கொண்டிருப்பதை அகற்ற வேண்டுமென்றால், பா.ஜ.,வும், அ.தி.மு.க.,வும் இணைந்தால்தான் முடியும்.
இந்த மக்கள் விருப்பத்தை, இ.பி.எஸ்., பூர்த்தி செய்துள்ளார். மிகப்பெரிய பலத்துடன் தி.மு.க.,வை எதிர்க்க உள்ளோம். இந்த பயத்தில், அ.தி.மு.க., - பா.ஜ., மத்தியில் பிரச்னை இருப்பதாக, தி.மு.க., அவதூறு பரப்பி வருகிறது.
பா.ஜ., அரசு, இஸ்லாமியர்களுக்காக ஒதுக்கிய நிதி அளவிற்கு, கடந்த காலங்களில், காங்., ஆட்சியிலும் கூட ஒதுக்கவில்லை. பா.ஜ., அரசு, இஸ்லாமியர்களுக்கு எதிரானது என, தி.மு.க., நயவஞ்சக பிரசாரம் செய்கிறது. இதை இஸ்லாமியர்கள் நம்பக்கூடாது.
சட்டம் ஒழுங்கு சீர்கேடு என்றாலே, அது தி.மு.க., என்பது எல்லோருக்கும் தெரியும்.
பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்றால், தி.மு.க.,வை, 2026ல் அகற்ற வேண்டும். எல்லோருக்குமான ஆட்சியாக, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்.
ஹிந்து மதத்தின் உணர்வுகள் பாதிக்கப்பட்டால், நான் கட்டாயம் குரல் கொடுப்பேன். இதற்காக, தி.மு.க., என்னை திரும்ப, திரும்ப கைது செய்கின்றனர்.மற்றவர்களைப்போல், தாத்தா முதல்வராக இருந்தால்தான், மகன் முதல்வராக முடியும் என்ற நடைமுறை பா.ஜ.,வில் இல்லை. இவ்வாறு, வேலூர் இப்ராஹிம் தெரிவித்தார்.