/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சீட்' தராவிட்டாலும் தி.மு.க., கூட்டணியில் தொடர்வோம்'
/
'சீட்' தராவிட்டாலும் தி.மு.க., கூட்டணியில் தொடர்வோம்'
'சீட்' தராவிட்டாலும் தி.மு.க., கூட்டணியில் தொடர்வோம்'
'சீட்' தராவிட்டாலும் தி.மு.க., கூட்டணியில் தொடர்வோம்'
ADDED : பிப் 17, 2024 02:31 AM

கோவை;ம.தி.மு.க., கட்சியினரிடம், லோக்சபா தேர்தல் நிதி பெறும் நிகழ்வு, கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. நிதியை பெற்றுக்கொண்ட பின், அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:
தேர்தல் பத்திர திட்டம் செல்லாது என, உச்சநீதி மன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது. பா.ஜ.,வை அ.தி.மு.க., எதிர்ப்பதை வரவேற்கிறோம்; அதை தொடர வேண்டும்.
'இண்டியா' கூட்டணி, வரும் தேர்தலில் மாபெரும் வெற்றி பெறும். கூட்டணி கட்சியினரிடம் கடந்த முறை லோக்சபா, ராஜ்யசபா 'சீட்' தலா ஒன்று கேட்டோம்.
இந்த முறை கூடுதலாக ஒரு லோக்சபா 'சீட்' கேட்டுள்ளோம். தேர்தலில் 'சீட்' கொடுக்கிறார்களோ, இல்லையோ தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேற மாட்டோம்.