/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தி.மு.க.,படுதோல்வியை சந்திக்கும்: இந்து முன்னணி தலைவர் பேச்சு
/
தி.மு.க.,படுதோல்வியை சந்திக்கும்: இந்து முன்னணி தலைவர் பேச்சு
தி.மு.க.,படுதோல்வியை சந்திக்கும்: இந்து முன்னணி தலைவர் பேச்சு
தி.மு.க.,படுதோல்வியை சந்திக்கும்: இந்து முன்னணி தலைவர் பேச்சு
ADDED : பிப் 15, 2024 06:53 AM

கோவை : ''இந்துக்களை தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் தி.மு.க., அரசு வரும், 2026 தேர்தலில் படுதோல்வியை சந்திக்கும்; எதிர்காலத்தில் காணாமல் போகும்,'' என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார்.
கோவை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானவர்களுக்காக, நேற்று நடந்த, 26ம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியில்அவர்பேசியதாவது:
தமிழகத்தில் மிகப்பெரிய கலவரம் ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. இந்துக்களை தொடர்ந்து இழிவுபடுத்தி வரும் தி.மு.க., அரசு வரும், 2026 தேர்தலில் படுதோல்வியை சந்திக்கும். எதிர்காலத்தில் காணாமல் போகும்.
பா.ஜ.,கூட்டணியிலிருந்து விலகியபின், அ.தி.மு.க., சிறுபான்மையினருக்கு ஆதரவாக பேசுகிறது. கோவை குண்டுவெடிப்பு கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி வருகிறது. கோவை கருமத்தம்பட்டியில் நடந்த, அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி, நெற்றியிலிருந்த சந்தனத்தையும், குங்குமத்தையும் அழித்துவிட்டு பங்கேற்று, சிறுபான்மையினருக்கு ஆதரவாக பேசினார்.
சிறுபான்மை மக்களுக்கு ஆதரவளிக்க, தி.மு.க., அ.தி.மு.க., என்ற இருவர்களும் சளைத்தவர்கள் அல்ல. தமிழகத்தில் கோவில்களை இடிக்க, தி.மு.க.,வரிந்துகட்டி வேலை பார்க்கிறது.
கோவையில் இதுவரை ஐந்து கோவில்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. கடவுள் நம்பிக்கை இல்லாத கம்யூனிஸ்ட்களையும், பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் திராவிட கட்சிகளையும் வரும் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.

