ADDED : செப் 11, 2025 09:22 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி; பொள்ளாச்சி தெற்கு தி.மு.க.வினர், நுாதன பிரசாரம் மேற்கொண்டனர்.
பொள்ளாச்சி நகராட்சி, 31 மற்றும், 28வது வார்டுகளில் தெற்கு நகர தி.மு.க. சார்பில், நுாதன பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. தெற்கு நகர பொறுப்பாளர் அமுதபாரதி தலைமை வகித்தார்.தலைமை கழக பொறுப்பாளர் சேலம் கோவிந்தன், குடுகுடுப்பைக்காரன் வேடமணிந்து, முதல்வர் ஸ்டாலின் சாதனைகளை எடுத்துரைத்து ஓட்டு சேகரித்தார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் ஜெயக்குமார், துணை செயலாளர் தர்மராஜ், நகராட்சி துணை தலைவர் கவுதமன் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.