/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சில பள்ளிகளுக்கு மட்டும் 'டிஎன் ஸ்பார்க்' புத்தகங்கள்; தகுதியான கணினி ஆசிரியர்கள் பயிற்சி வழங்க கோரிக்கை
/
சில பள்ளிகளுக்கு மட்டும் 'டிஎன் ஸ்பார்க்' புத்தகங்கள்; தகுதியான கணினி ஆசிரியர்கள் பயிற்சி வழங்க கோரிக்கை
சில பள்ளிகளுக்கு மட்டும் 'டிஎன் ஸ்பார்க்' புத்தகங்கள்; தகுதியான கணினி ஆசிரியர்கள் பயிற்சி வழங்க கோரிக்கை
சில பள்ளிகளுக்கு மட்டும் 'டிஎன் ஸ்பார்க்' புத்தகங்கள்; தகுதியான கணினி ஆசிரியர்கள் பயிற்சி வழங்க கோரிக்கை
ADDED : ஆக 03, 2025 09:39 PM
கோவை; அரசுப்பள்ளி மாணவர்களுக்காக பள்ளிக்கல்வி வெளியிட்டுள்ள 'டிஎன் ஸ்பார்க்' பாடத்திட்டம் தகுதியான கணினி ஆசிரியர்கள் இல்லாத நிலையில்,முழு பயன் தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மாநிலம் முழுவதும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ள ஹைடெக் லேப்களில் 6 முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அடிப்படை கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த கல்வியை வழங்க, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் டிஎன் ஸ்பார்க் எனும் கணினி பாடத்திட்டத்தை வடிவமைத்துள்ளது. தற்போது, 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கான புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பலபள்ளிகளில்இன்னும் பயிற்றுநர்கள் நியமிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளுக்கு மட்டுமே இத்திட்டத்தின் கீழ் புத்தகங்கள் வழங்கப்பட்டு,மாணவர்களுக்கு ஹைடெக் லேப்களில் பயிற்சியும்அளிக்கப்பட உள்ளன. இதற்கான கால அட்டவணையும் வழங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் 84 பள்ளிகள், நாமக்கல்லில் 55, திருச்சியில் 63 பள்ளிகள் என மாநிலத்தின் பல மாவட்டங்களில் பள்ளிகளை தேர்வு செய்து, கற்றுக்கொடுப்பதற்காக தனியார் நிறுவனமான கெல்ட்ரான் மூலம் நியமிக்கப்பட்ட (அட்மினிஸ்ட்ரேட்டர் இன்ஸ்ட்ரக்டர்) பயிற்றுநர்கள் மற்றும் அறிவியல், கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
ஹைடெக் லேப்களில் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க, தகுதியான கணினி ஆசிரியர்கள் இல்லாத நிலையில், 'டிஎன் ஸ்பார்க்' மாணவர்களுக்கு முழுமையாக பயன் தருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுகுறித்து ஆசிரியர்கள் கூறுகையில், “முறையான ஆசிரியர் தகுதி பெறாத பயிற்றுநர்களால் எவ்வாறு மாணவர்களுக்கு கணினிப் பாடங்களைச் சரியாக கற்றுக்கொடுக்க முடியும்? தகுதியான கணினி ஆசிரியர்கள் மூலம் மட்டுமே பயிற்சி வழங்கப்பட்டால், இந்த ஹைடெக் ஆய்வகங்களும், கணினிப் பாடப்புத்தகமும் மாணவர்களுக்கு உண்மையிலேயே பயனுள்ளதாக அமையும்'' என்கின்றனர்.