/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'டிஎன் ஸ்பார்க்' மதிப்பீடு தேர்வு
/
'டிஎன் ஸ்பார்க்' மதிப்பீடு தேர்வு
ADDED : ஜன 15, 2026 06:44 AM
பொள்ளாச்சி: அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, அடிப்படை கணினி அறிவியல் மற்றும் செயற்கை நுண்ணறிவுத் திறன்களை வளர்க்க, 'டிஎன் ஸ்பார்க்' திட்டத்தின் கீழ் புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
முதற்கட்டமாக, கோவை மாவட்டத்தில் உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் (ஐ டெக் லேப்) கொண்ட 85 பள்ளிகளில் இத்திட்டம் தொடங்கப்பட்டது. பின்னர், 135 பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்ட நிலையில், தற்போது அது, 76 பள்ளிகளாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இத்திட்டத்தின் கீழ் மாணவர்களின் கற்றல் திறன் குறித்துக் கண்டறிய, முதற்கட்டமாகத் தொடங்கப்பட்ட 85 பள்ளிகளில் தற்போது மதிப்பீட்டுத் தேர்வு நடைபெற்று வருகிறது.
கல்வி அதிகாரிகள் கூறுகையில், 'மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புத்தகங்களின் அடிப்படையில், கணினி சார்ந்த அறிவை மதிப்பிட, 30 மதிப்பெண்களுக்கு, 3 கேள்விகள் கேட்கப்படுகின்றன. இப்பணிகளை இரண்டு நாட்களுக்குள் முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் அனைத்து மாணவர்களுக்கும் மதிப்பீட்டை முடிப்பது சவாலாக உள்ளது,' என்றனர்.

