sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 முதியோர் பேச்சு தடுமாறுகிறதா? மூளைச்சிதைவாக இருக்கலாம் 

/

 முதியோர் பேச்சு தடுமாறுகிறதா? மூளைச்சிதைவாக இருக்கலாம் 

 முதியோர் பேச்சு தடுமாறுகிறதா? மூளைச்சிதைவாக இருக்கலாம் 

 முதியோர் பேச்சு தடுமாறுகிறதா? மூளைச்சிதைவாக இருக்கலாம் 


ADDED : மார் 15, 2026 05:24 AM

Google News

ADDED : மார் 15, 2026 05:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அந்த வீட்டின் ஜன்னல் கூட பத்மினியின் குரல் அறிந்திருக்கும். பட்டாசாய் வெடிக்கும் பேச்சு, நரை வந்த பிறகு, குளற ஆரம்பித்தது.

ஒரு கட்டத்தில் அவர் பேசுவது யாருக்கும் புரியவில்லை. மருத்துவரை அணுகிய போது தான், அது மூளைச்சிதைவு நோய் என தெரியவந்தது.

''பல முதியோர் சந்திக்கும் பிரச்னை இது'' என்கிறார், அரசு மருத்துவமனை காது, மூக்கு, தொண்டை நிபுணர் முருகன்.

வாய் குளறல் முக்கிய அறிகுறி. அப்போதே, சி.டி. ஸ்கேன் மூலம் மூளையில் அடைப்பு உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் இருப்போர், மூளை, இதயம் சார்ந்த பரிசோதனைகளை ஆண்டுக்கு ஒருமுறை எடுத்து கொண்டால், கண்டுபிடிப்பது சுலபம். சிகிச்சை உள்ளது. பயப்பட தேவையில்லை.

வயது முதிர்வால் மூளைக்கு ரத்த ஓட்டம் குறைந்து, செல்கள் அழிவதால், மூளை அளவு சுருங்கிவிடும். ரத்தம் தடைபடுவதால் ரத்த குழாய் வெடிப்பு, அடைப்பு ஏற்படலாம். மூளை உத்தரவிடாமல், உறுப்புகளால் செயல்பட முடியாது. இதனால் பக்கவாதம் ஏற்படலாம்.

சிலருக்கு இதய குழாய்களில் இருந்து வெளியேறும் ரத்தம் கெட்டியாகி உறைந்துவிடலாம். இதனாலும் மூளைக்கு போதிய ரத்தம் செல்லாது. இ.சி.ஜி. பரிசோதனையில் இதயம் சார்ந்த பிரச்னைகளை கண்டறியலாம். ரத்தம் உறைவதை தடுக்கும் மருந்துகள் அளிக்கலாம்.

தொண்டையில் புற்றுநோய் இருக்கிறதா எனவும் பரிசோதிக்க வேண்டும். இப்படி ஒரு பாதிப்புக்கு பல்வேறு காரணங்கள் இருப்பதால், அலட்சியம் செய்யாமல் சிகிச்சை பெறவேண்டும் என்கிறார்.






      Dinamalar
      Follow us