/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நாளை மருதமலை கோவிலுக்கு கார், ஜீப்பில் செல்ல வேண்டாம்
/
நாளை மருதமலை கோவிலுக்கு கார், ஜீப்பில் செல்ல வேண்டாம்
நாளை மருதமலை கோவிலுக்கு கார், ஜீப்பில் செல்ல வேண்டாம்
நாளை மருதமலை கோவிலுக்கு கார், ஜீப்பில் செல்ல வேண்டாம்
ADDED : செப் 28, 2024 05:02 AM
கோவை: வரும் ஞாயிறன்று மருதமலைக்கோவிலுக்கு மலைமீது கார், ஜீப்களில் செல்ல அனுமதியில்லை என்று, கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குறித்து, மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
செப்.,29ல் மருதமலை சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு, பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவர் என்பதால், அன்றைய தினம் மலைக்கோவிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில்வரஅனுமதியில்லை. மலைமீது வாகனங்கள் நிறுத்துவதற்கு போதுமான இடவசதி இல்லாததாலும், பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவதால், ஏற்படும் இடநெருக்கடியை தவிர்க்கவும் இந்த ஏற்பாடு.
பக்தர்கள் தேவஸ்தானத்தின் சார்பில் இயக்கப்படும் பஸ்களில் பயணிக்கலாம் அல்லது இரு சக்கர வாகனங்களில் வரலாம்.