/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆபத்தான நீர்நிலைகளில் குளிக்காதீங்க! மாணவர்களுக்கு அறிவுரை
/
ஆபத்தான நீர்நிலைகளில் குளிக்காதீங்க! மாணவர்களுக்கு அறிவுரை
ஆபத்தான நீர்நிலைகளில் குளிக்காதீங்க! மாணவர்களுக்கு அறிவுரை
ஆபத்தான நீர்நிலைகளில் குளிக்காதீங்க! மாணவர்களுக்கு அறிவுரை
ADDED : அக் 01, 2024 11:32 PM

கோவை : வடகிழக்கு பருவமழை துவங்க இருப்பதால், கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தலைமை ஆசிரியர்கள், மாணவ மாணவியருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தி உள்ளார்.
வடகிழக்கு பருவமழை துவங்க இருப்பதால், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, பள்ளிகளிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
மழைகாலத்தில் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மாணவர்கள் செய்ய வேண்டியவை உட்பட, வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:
பள்ளிகளில் மின் இணைப்புகளை கண்காணிப்பது, வடிகால்களை சுத்தம் செய்வது, திறந்தவெளி கால்வாய்களை துார்வாரி மூடுவது, குழிகளை நிரப்புவது மற்றும் மாணவர்களின் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படுத்தும் மரங்கள் மரக்கிளைகளை வெட்டி அகற்றுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
பழுதடைந்த கட்டடங்களை பயன்படுத்துவதை, முழுவதுமாக தவிர்க்க வேண்டும்.
அத்தகைய கட்டடங்களை இடிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தவிர, பள்ளி வளாகங்களில் தண்ணீர் தேங்காமல் இருப்பதை, உறுதி செய்ய வேண்டும்.
ஏரி, ஆறு, குளங்களில் மாணவர்கள் குளிப்பதை தவிர்க்கவும்.
வெள்ளம் அபாயமுள்ள நீர்நிலைகளுக்கு அருகே, வேடிக்கை பார்க்க அனுமதிக்கக் கூடாது என, பெற்றோருக்கு அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.