/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குப்பை தரம் பிரித்து மக்கள் தருகிறார்களா?
/
குப்பை தரம் பிரித்து மக்கள் தருகிறார்களா?
ADDED : நவ 09, 2025 10:45 PM

சூலுார்: நீலம்பூர் ஊராட்சியில் உள்ள வீடுகளில், மக்கள் தரம் பிரித்து குப்பை வழங்குகின்றனரா என, அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்ட நீலம்பூர் ஊராட்சியில் நடக்கும் துாய்மை பணிகளை, பி.டி.ஓ., முத்துராஜூ மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மக்கும் மற்றும் மக்காத குப்பை என தரம் பிரித்து மக்கள் வழங்குகிறார்களா, துாய்மை பணியாளர்கள் பரிசோதனை செய்து சேகரிக்கிறார்களா என, வீடு, வீடாக சென்று ஆய்வு செய்தனர்.
ஒவ்வொரு வீட்டின் முன்புறமும், துாய்மை தெரு என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு, அதில், துாய்மை பணியாளர்கள் குப்பை சேகரித்த விபரம் பூர்த்தி செய்யப்பட்டது. தரம் பிரித்து வழங்காத மக்களுக்கு, குப்பையை கட்டாயம் தரம் பிரித்து வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டது.
ஒவ்வொரு வீட்டிலும், குப்பை தரம் பிரித்து வழங்கப்படுவதை, தூய்மை பணியாளர்கள் உறுதி செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டது.
தரம் பிரிக்காமல் குப்பை வழங்குவதால் துாய்மை பணியாளர்களுக்கு உண்டாகும் நெருக்கடி குறித்து மக்களுக்கு விளக்கப்பட்டது. பொது இடங்களில் குப்பை கொட்டுவோரை கண்டறிந்து அபராதம் விதிக்கப்படும் என, அதிகாரிகள் எச்சரித்தனர்.

