/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
செவிலியர்கள் கழிப்பறையில் 'பென் கேமரா' வைத்த டாக்டர் கைது பொள்ளாச்சி அரசு மருத்துவமனை பயிற்சி டாக்டர் கைது
/
செவிலியர்கள் கழிப்பறையில் 'பென் கேமரா' வைத்த டாக்டர் கைது பொள்ளாச்சி அரசு மருத்துவமனை பயிற்சி டாக்டர் கைது
செவிலியர்கள் கழிப்பறையில் 'பென் கேமரா' வைத்த டாக்டர் கைது பொள்ளாச்சி அரசு மருத்துவமனை பயிற்சி டாக்டர் கைது
செவிலியர்கள் கழிப்பறையில் 'பென் கேமரா' வைத்த டாக்டர் கைது பொள்ளாச்சி அரசு மருத்துவமனை பயிற்சி டாக்டர் கைது
ADDED : டிச 01, 2024 01:53 AM

பொள்ளாச்சி:கோவை மாவட்டம், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், நேற்று கழிப்பறைக்கு சென்ற பெண் செவிலியர்கள், அங்கு பேனா கேமரா மறைத்து வைத்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பதற்றத்துடன் வெளியேறிய செவிலியர்கள், மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் ராஜாவிடம் புகார் கொடுத்தனர்.
இருப்பிட மருத்துவ அலுவலர் மாரிமுத்து மற்றும் டாக்டர்கள் அங்கு சென்று பரிசோதனை செய்த போது, பேனா கேமராவை கண்டறிந்து, இதை யார் வைத்தது என, விசாரித்தனர்.
அதில், பயிற்சி ஆர்த்தோ டாக்டர் வெங்கடேஷ் பேனா கேமராவை வைத்தது தெரியவந்தது. இது குறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர், கிழக்கு போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
கூடுதல் எஸ்.பி., சிருஷ்டி சிங், இன்ஸ்பெக்டர் ரத்னகுமார், எஸ்.ஐ.,கவுதம் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று டாக்டரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், பெண் செவிலியர்கள் பயன்படுத்தும் கழிப்பறையில் ரகசிய கேமராவை மறைத்து வைத்ததை டாக்டர் ஒப்புக்கொண்டதையடுத்து, அவரை கைது செய்தனர்.
இவர் பணியாற்றிய வேறு பகுதியில் இதுபோன்று கேமராக்கள் வைத்துள்ளாரா என்பது குறித்தும் விசாரிக்கின்றனர்.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனை பயிற்சி டாக்டர் செய்த செயல், பெண் டாக்டர்கள், செவிலியர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
போலீசார் கூறியதாவது:
மருத்துவமனையில் இருந்த கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டன.
சம்பவம் நடந்த போது பயிற்சி டாக்டர் வெங்கடேஷ், ரகசிய கேமராவில் இருந்த மெமரி கார்டை எடுத்தது தெரியவந்தது. அவரிடம் விசாரணை செய்ததில் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
பத்து நாட்களுக்கு முன், 'ஆன்லைன்' வாயிலாக பென் கேமராவை வாங்கியதாக தெரிவித்தார். அவரை கைது செய்து, மொபைல்போன், மெமரி கார்டு ஆகியவற்றை பறிமுதல் செய்து, ஆய்வுக்கு உட்படுத்த உள்ளோம்.
கைது செய்யப்பட்ட வெங்கடேஷ், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தாலுகா, கீழ்குப்பம் பனமரத்துப்பட்டியை சேர்ந்தவர். இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளன.
கடந்த, 2016ம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., முடித்த இவர், 2022 முதல் கோவை மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், எம்.எஸ்., ஆர்த்தோ பயின்று வருகிறார். பயிற்சியின் ஒரு பகுதியாக கடந்த, 16ம் தேதி முதல் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் 15 நாட்களாக பணியாற்றி வருகிறார்.
இவ்வாறு, போலீசார் கூறினர்.