/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சைலன்ட் கில்லரிடம்' இருந்து தப்பிக்க டாக்டர் சொல்கிறார் வழி!
/
'சைலன்ட் கில்லரிடம்' இருந்து தப்பிக்க டாக்டர் சொல்கிறார் வழி!
'சைலன்ட் கில்லரிடம்' இருந்து தப்பிக்க டாக்டர் சொல்கிறார் வழி!
'சைலன்ட் கில்லரிடம்' இருந்து தப்பிக்க டாக்டர் சொல்கிறார் வழி!
ADDED : பிப் 02, 2025 01:30 AM

சர்க்கரை பாதிப்பு என்றால் என்ன, அது வராமல் தடுப்பது எப்படி, அதனால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மீள்வது எப்படி என்பது குறித்து விளக்குகிறார், இதயங்கள் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன்.
அவர் கூறியதாவது:
சர்க்கரை பாதிப்பு ஏற்பட, உடல் உழைப்பு இல்லாததே காரணம். சர்க்கரை பாதிப்பு வந்தால், வாழ்க்கையே அவ்வளவு தான் என்ற தவறான எண்ணம், பலரிடமும் உள்ளது.
கல் தோன்றி, மண் தோன்றா காலத்தில் மொழிகள் மட்டும் தோன்றவில்லை, சில நோய்களும் தோன்றின என்பதற்கு ஆதாரம் உள்ளது.
கி.மு., 1500 காலகட்டத்தில் எழுதப்பட்ட, எகிப்து நாட்டின் பாபிரஸ் ஏடுகளில், சர்க்கரை நோய் பற்றிய குறிப்பு இருக்கிறது. 'டயாபிடீஸ்' என்றால், வடிகுழாய் என்று பொருள்.
உடம்பின் நீர்ச்சத்து, சிறுநீர் வழியாக வெளியேறுவதால் அந்த நோயை டயாபிடீஸ் என, கிரேக்க மருத்துவர்கள் குறிப்பிட்டார்கள். கி.பி.,1600களில் டயாபிடீஸ் என்ற சொல்லோடு, 'மெலீட்டஸ்' என்ற லத்தீன் அடைமொழி சேர்க்கப்பட்டது.
மெலீட்டஸ் என்றால் தேன் என்று பொருள். சிறுநீர் தேன் போல் இனிப்பதால், 'மெலீட்டஸ்' என்ற அடைமொழி சேர்க்கப்பட்டது. இது சர்க்கரையின் வரலாறு.
ஆனால், இன்று சர்க்கரை நோய் வெறும் வடி குழாய், தேன், உணவு, உருளை, உடற்பயிற்சி மட்டும் பற்றி பேசும் குறைபாடு கிடையாது. கட்டுப்படுத்தாத சர்க்கரை நோய் இருதயம், மூளை, கண், கால், சிறுநீரகம், கல்லீரல், ரத்தக்குழாய்களை அடைக்கும்.
இது ஒரு அமைதியான கொலையாளி என்ற புரிதல் நமக்கு வர வேண்டும். ஆனால், சர்க்கரை அளவை சரியான உடற்பயிற்சி, உணவு முறையால் கட்டுக்குள் வைத்தால், பல உறுப்புக்கள் பழுதடைவதை தடுக்க இயலும் என்பதுதான் நல்ல செய்தி.
(சர்க்கரை நோயால் ஏற்படும் மாரடைப்பில் இருந்து தப்புவது எப்படி...அடுத்த வாரம்)