/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உடல் ஆரோக்கியம் முக்கியம் முகாமில் டாக்டர் 'அட்வைஸ்'
/
உடல் ஆரோக்கியம் முக்கியம் முகாமில் டாக்டர் 'அட்வைஸ்'
உடல் ஆரோக்கியம் முக்கியம் முகாமில் டாக்டர் 'அட்வைஸ்'
உடல் ஆரோக்கியம் முக்கியம் முகாமில் டாக்டர் 'அட்வைஸ்'
ADDED : செப் 24, 2025 11:24 PM

வால்பாறை: மாணவர்கள் ஆரோக்கியமாக இருந்தால் தான் நன்றாக படிக்க முடியும் என, மருத்துவ முகாமில் டாக்டர்கள் தெரிவித்தனர்.
தேசிய நலவாழ்வு குழுமம் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை துறை சார்பில், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 'நலமான பெண்கள் வளமான குடும்பம்' என்ற திட்டத்தின் கீழ், சிறப்பு மருத்துவ முகாம்அக். 2ம் தேதி வரை நடக்கிறது.
வால்பாறை அடுத்துள்ள, சின்கோனா அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த மருத்துவ முகாமை தலைமை ஆசிரியர்(பொ) ஜெயக்குமார் துவக்கி வைத்தார். முகாமில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் ஸ்ரீநிவாசன், ஷில்பாஸ்ரீ ஆகியோர் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு சிகிச்சை அளித் தனர். டாக்டர்கள் பேசும் போது, 'உடல் ஆரோக்கியமாக இருந்தால் தான் நன்றாக படிக்க முடியும், எந்த சூழ்நிலையிலும் காலை உணவை தவிர்க்க கூடாது. ரத்த சோகை ஏற்படாமல் இருக்க அன்றாடம் சத்தான உணவுகளை உட்கொள்ள வேண்டும். உடல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க நிறைய பழங்களை உட்கொள்ள வேண்டும். வாழ்க்கை வளமாக வாழ முதலில் உடல் ஆரோக்கியத்தை கடைபிடிக்க வேண்டும்,' என்றனர்.