/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
/
அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 14, 2024 08:42 PM

பொள்ளாச்சி; சென்னையில் டாக்டரை கத்தியால் குத்திய சம்பவத்தை கண்டித்து, பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நுாற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில், நோயாளியின் மகன், டாக்டரை கத்தியால் குத்தினார். இச்சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில், அரசு மருத்துவமனை டாக்டர்கள் சங்கம்,இந்திய மருத்துவ சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. டாக்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந்திய மருத்துவ சங்க பொள்ளாச்சி கிளை தலைவர் சவுந்தரராஜன், அரசு மருத்துவமனை இருப்பிட மருத்துவ அலுவலர் மாரிமுத்து, டாக்டர்கள் கார்த்திகேயன், முருகேசன், ஜெயக்குமார் மற்றும் டாக்டர்கள் பங்கேற்றனர்.
இச்சம்பவத்தை கண்டித்து, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில், அவசர சிகிச்சைகள் மட்டும் அளிக்கப்பட்டன. புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கவில்லை, என, டாக்டர்கள் தெரிவித்தனர்.