/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கேட்டில் சிக்கிக் கொண்ட நாய் பத்திரமாக மீட்பு
/
கேட்டில் சிக்கிக் கொண்ட நாய் பத்திரமாக மீட்பு
ADDED : மே 17, 2025 01:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை:சிங்காநல்லுார் பகுதியில், வீட்டு கேட்டில் தலையை விட்டு, சிக்கிக்கொண்ட நாயை, தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.
சிங்காநல்லுார், நஞ்சப்பா நகரில் பாரதி என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. நேற்று அதிகாலை அந்த வீட்டின் கேட்டின் அருகே வந்த நாய் ஒன்று, கேட்டில் இருந்த இரும்பு வளையத்துக்குள் தலையை விட்டு சிக்கிக்கொண்டது.
தலையை வெளியே எடுக்க முடியாமல் தவித்தது. அக்கம் பக்கத்தினர், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பீளமேடு தீயணைப்பு நிலைய அலுவலர் ரவிக்குமார் தலைமையில், தீயணைப்பு வீரர்கள், நாயை பத்திரமாக மீட்டனர்.