/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குடும்ப வன்கொடுமை சட்டம் : ஆணும் வழக்கு தொடரலாம்
/
குடும்ப வன்கொடுமை சட்டம் : ஆணும் வழக்கு தொடரலாம்
குடும்ப வன்கொடுமை சட்டம் : ஆணும் வழக்கு தொடரலாம்
குடும்ப வன்கொடுமை சட்டம் : ஆணும் வழக்கு தொடரலாம்
ADDED : நவ 26, 2025 07:12 AM
கு டும்ப வன்முறை சட்டத்தின் கீழ் மனைவியை கொடுமைப்படுத்தியதாக கணவன் மீது அதிகளவில் வழக்குகள் தாக்கல் செய்யப்படுகிறது. கணவனை, மனைவி கொடுமைப்படுத்தினாலும், குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ், ஆண்களும் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் கீழ் ஆண்களும் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய முடியுமா? என்பது குறித்து உச்சநீதிமன்றம் ஒரு வழக்கில் பரிசீலித்துள்ளது. குடும்ப வன்முறை தடுப்பு சட்டத்தின் பிரிவு, 2 (கியூ) பகுதியில், இந்திய அரசியலமைப்பு சட்டம் கட்டளை, 14 ல் கூறப்பட்டுள்ளவற்றிற்கு முரணானது என்று குறிப்பிட்டு பிரிவு 2 (கியூ) வில் இருந்த வயதுடைய ஆண் என்ற வார்த்தையை நீக்கியுள்ளது.
வயது வந்த ஆண் என்ற வார்த்தையை நீக்கிவிட்டு அந்த பிரிவினை படித்து பார்த்தால், குடும்ப வன் முறையால் பாதிக்கப்படும் ஆண் அல்லது பெண் ஆகிய இருவரும் அந்த சட்டத்தின் மூலம் நிவாரணம் பெறலாம். இந்த சட்டம், பெண்களுக்கு மட்டுமல்ல. ஆண்களும் நிவாரணங்களை பெறலாம் என்று கர்நாடகா உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் வாயிலாக தெரிய வருகிறது.

