/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆன்லைனில் உரங்கள் வாங்காதீங்க! வேளாண் துறையினர் எச்சரிக்கை
/
ஆன்லைனில் உரங்கள் வாங்காதீங்க! வேளாண் துறையினர் எச்சரிக்கை
ஆன்லைனில் உரங்கள் வாங்காதீங்க! வேளாண் துறையினர் எச்சரிக்கை
ஆன்லைனில் உரங்கள் வாங்காதீங்க! வேளாண் துறையினர் எச்சரிக்கை
ADDED : மார் 17, 2025 09:32 PM
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு சுற்று வட்டார விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்திற்கு முகவர்கள் வாயிலாகவும், இணைய (ஆன்லைன்) வாயிலாகவும் விற்பனை செய்யப்படும் உரங்களை வாங்க வேண்டாம், என, வேளாண்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதியில், விவசாயம் சார்ந்த பகுதிகள் அதிகம் உள்ளது. விவசாயிகள் தங்கள் விளைநிலத்தில் அதிக அளவு ரசாயன உரங்களும், சில விவசாயிகள் இயற்கை உரங்களையும் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த உரங்களை இணைய வழியிலோ (ஆன்லைன்) அல்லது தோட்டங்களில் நேரடியாக வந்து விற்பனை செய்யும் முகவர்களிடமோ வாங்க வேண்டாம். இவ்வாறு விற்பனை செய்ய, வேளாண் துறையால் உர உரிமம் வழங்கப்படுவதில்லை.
இவர்கள் வாயிலாக வாங்கப்படும் விலை உயர்ந்த உரங்கள் வாங்கி பயன்படுத்துவதால், சாகுபடி செலவு அதிகமாவதுடன் மகசூல் இழப்பு ஏற்படவும் வாய்ப்பு அதிக அளவு உள்ளது.
மேலும், விவசாயிகள் மற்றும் மாடித்தோட்ட காய்கறி உற்பத்தியாளர்கள், உரம் சம்பந்தமாக இணையதளத்தில் வரும் கவர்ச்சிகரமான விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்.
எனவே, விவசாயிகள் வேளாண் துறை இடமிருந்து உரிமம் பெற்ற விற்பனை நிலையங்கள் வாயிலாக ரசாயன, இயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை வாங்கி பயன்படுத்த வேண்டும்.
மேலும், உர விற்பனை நிலையங்களில் உர ஆய்வாளர்கள் அதன் தரத்தினை ஆய்வு செய்து அதிகபட்ச விலைக்கு மிகாமல் விற்பனை செய்வதையும் உறுதிப்படுத்தி வருகின்றனர்.
விவசாயிகள் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் குறைந்த விலையில் கிடைக்கும் தரமான உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். இத்தகவலை, கிணத்துக்கடவு வேளாண் உதவி இயக்குனர் அனந்தகுமார் மற்றும் துணை வேளாண் அலுவலர் மோகன சுந்தரம் ஆகியோர் தெரிவித்தனர்.